மும்பை அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணியின் விக்கெட் கீப்பர்/ பேட்ஸ்மேனான தோனி ஹாட்ரிக் சிக்ஸர் விளாசி அசத்தினார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது. 


நடப்பு ஐபிஎல் தொடரில் பெரும்பான்மையான ரசிகர்கள் கவனிக்கும் வீரர்களில் முதல் இடத்தில் இருப்பவர் சென்னை அணியின் வீரர் மகேந்திர சிங் தோனி தான். தோனி களமிறங்கினால் மட்டும் போதும், என ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இந்நிலையில் இன்று அதாவது ஏப்ரல் 14ஆம் தேதி சென்னை அணி மும்பை அணிக்கு எதிராக விளையாடியது.






இதில் முதலில் சென்னை அணி பேட்டிங் செய்தது. இதில் கடைசி ஓவரில் களமிறங்கிய தோனி தான் எதிர் கொண்ட நான்கு பந்துகளில், முதல் மூன்று பந்துகளை சிக்ஸருக்கு விளாசி மைதானத்தினை அலறவிட்டார். 


மொத்தம் 4 பந்துகளில் மூன்று சிக்ஸர் மற்றும் இரண்டு ரன்கள் உட்பட மொத்தம் 20 ரன்கள் சேர்த்திருந்தார். இதனால் தோனியின் ஸ்ட்ரைக் ரேட் 500 ஆகும்.