இந்தியன் பிரீமியர் லீக் 2024ன் 48வது போட்டியில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோத இருக்கின்றன. லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு இந்த போட்டி தொடங்குகிறது.
இரு அணிகளும் தங்களின் முந்தைய போட்டியில் தோல்வியை தழுவி உள்ளது. லக்னோ இன்னும் பிளே ஆஃப் பந்தயத்தில் உள்ள நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப்க்கு தகுதிபெற கடினமாக போராட வேண்டும். பிளே ஆஃப் சுற்றுக்கு மும்பை இந்தியன்ஸ் செல்ல வேண்டும் என்றால் இனி வரும் அனைத்து போட்டிகளிலும் வெற்றிபெற்றே ஆக வேண்டும்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் தற்போது புள்ளிகள் பட்டியலில் ஐந்தாவது இடத்தில் உள்ளது. மும்பை அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 4 தோல்விகளை சந்தித்துள்ளது. மறுபுறம், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை அணி இதுவரை 9 போட்டிகளில் விளையாடி மூன்றில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
பிட்ச் ரிப்போர்ட்:
லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தின் பிட்ச் மிகவும் மெதுவாக இருக்கும். இதன் காரணமாக ஸ்பின்னர்கள் தங்களது சுழல் மாயத்தை வெளிப்படுத்தலாம். மற்ற ஸ்டேடியங்களை போல் இல்லாமல், இந்த ஸ்டேடியத்தில் 200 ரன்கள் எளிதில் அடிக்க முடியாது.
இந்தியன் பிரீமியர் லீக் வரலாற்றில், லக்னோவில் உள்ள ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இதுவரை மொத்தம் 6 போட்டிகள் நடந்துள்ளன. இதன்போது முதலில் பேட்டிங் செய்த அணி 5 போட்டிகளிலும், இரண்டாவதாக பேட்டிங் செய்த அணி 1 போட்டியிலும் வெற்றிபெற்றுள்ளது. இதையடுத்து, இங்கு எந்த அணி டாஸ் வெல்கிறதோ அந்த அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்யும். லக்னோ ஸ்டேடியத்தின் முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 160 ரன்கள். இரண்டாவது இன்னிங்ஸ் 122 ரன்கள் ஆகும்.
இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
ஐபிஎல் வரலாற்றில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இதுவரை 4 போட்டிகளில் லக்னோ அணிகள் அதிகபட்சமாக 3 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளது. மும்பை அணி ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.
கடந்த 4 போட்டிகளின் முடிவுகள்:
2023 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
2023 - மும்பை இந்தியன்ஸ் அணி 81 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
2022 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
2022 - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:
குயின்டன் டி காக், கே.எல். ராகுல் (கேப்டன் & விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், ஆயுஷ் படோனி, க்ருனால் பாண்டியா, மாட் ஹென்றி, ரவி பிஷ்னோய், மொஹ்சின் கான், யாஷ் தாக்கூர்.
இம்பேக்ட் வீரர்: அமித் மிஸ்ரா
மும்பை இந்தியன்ஸ்:
இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), திலக் வர்மா, டிம் டேவிட், நேஹல் வதேரா, முகமது நபி, பியூஷ் சாவ்லா, ஜஸ்பிரித் பும்ரா, லூக் வூட்
இம்பேக்ட் வீரர்: நுவான் துஷாரா