17 ஆவது ஐபிஎல் தொடரின் 54ஆவது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்தப் போட்டி லக்னோவில் உள்ள ஏக்னா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கொல்கத்தா அணி ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. அதன்படி களமிறங்கிய கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 235 ரன்கள் சேர்த்து இருந்தது. அடுத்து 236 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ அணி களமிறங்கியது. 


நிதானமாக இலக்கைத் துரத்த திட்டமிட்ட லக்னோ அணி பொறுமையாகவே விளையாடியது. இரண்டாவது ஓவரின் கடைசி பந்தில் லக்னோ அணியின் தொடக்க ஆட்டக்காரர் குல்கர்னி தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். அதன் பின்னர் வந்த மார்க்கஸ் ஸ்டாய்னஸ் கேப்டன் கே எல் ராகுலுடன் இணைந்து விக்கெட்டை இழக்காமல் சிறப்பாக விளையாடி வந்தார். எட்டாவது ஓவரின் மூன்றாவது பதில் நிதானமாக விளையாடி வந்த கே எல் ராகுல் 21 பந்தில் 25 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை ஹர்ஷித் ராணாவிடம் இழந்து வெளியேறினார். 


அடுத்து வந்த தீபக் ஹூடா ஐந்து ரன்கள் சேர்த்து நிலையில் வெளியேறினார். ஆட்டத்தின் பத்தாவது ஓவரில் சிறப்பாக விளையாடி வந்த மார்க்கஸ் ஸ்டாய்னஸ் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இவர் 21 பந்தில் 36 ரன்கள் சேர்த்து இருந்தார். இவரது விக்கெட்டினை ரஸல் கைப்பற்றினார்.


அதன் பின்னர் லக்னோ அணிக்கு நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த நிக்கோலஸ் பூரனும் அணியின் ஸ்கோர் 101 ஆக இருந்தபோது தனது விக்கெட்டினை ரஸல் பந்தில் இழந்து வெளியேறினார். இதனால் ஒட்டுமொத்த லக்னோ அணியின் நம்பிக்கையும் ஆயுஷ் பதோனி மற்றும் டர்னர் மீது விழுந்தது. நிதானமாக ரன்கள் சேர்த்து வந்த ஆயுஷ் பதோனி 12 பந்தில் 15 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேற, களத்திற்கு குர்னல் பாண்டியா வந்தார். களத்தில் இருந்த டர்னர் 14 ஆவது ஓவரில் இரண்டு சித்தர்களை பார்க்க விட்டு ரசிகர்களுக்கு நம்பிக்கை ஊட்டினார். ஆனால் அதே ஓவரின் கடைசி பந்தில் தனது விக்கெட்டில் விழுந்து வெளியேறினார். இதனால் லக்னோ அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியானது. அடுத்த ஓவரில் குர்னல் பாண்டியாவும் தனது விக்கெட்டினை இழக்க, கொல்கத்தா அணி வெற்றிக்கு தயாரானது. 


இறுதியில் லக்னோ அணி 16.1ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் கொல்கத்தா அணி 98 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது.