நடப்பு ஐபிஎல் தொடரின் 54 வது லீக் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணியும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்தப் போட்டி லக்னோவில் உள்ள எக்னா மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச முடிவு செய்தது. 


அதன்படி லக்னோ அணியின் இன்னிசை பிலிப் சால்ட் மற்றும் சுனில் நraiன் தொடங்கினார். ஆட்டத்தின் முதல் பந்தை பவுண்டரிக்கு பறக்கவிட்டு கொல்கத்தா அணியின் ரன் கணக்கை தொடங்கினார் பிலிப் சால்ட். மற்றொரு தொடக்க வீரரான சுனில் நரைன் முதலில் தான் எதிர்கொண்ட சில பந்துகளை எச்சரிக்கையாகவே விளையாடினார். ஆனால் பிலிப் சால்ட் தனது அதிரடியை எந்த இடத்திலும் குறைக்கவில்லை. மூன்றாவது ஓவரின் முடிவில் தொடக்க வீரர்கள் இருவரும் அதிரடியாக ஆட ஆரம்பித்தனர். நான்கு ஓவர்கள் முடியும்போது இருவரும் தலா 12 பந்துகளை எதிர் கொண்டு தலா 28 ரன்கள் குவித்து களத்தில் இருந்தனர். 


ஆட்டத்தின் ஐந்தாவது ஓவரில் பிலிப் சால்ட் தனது விக்கெட்டினை  இழந்து வெளியேறினார். அடுத்து வந்த ரகுவன்சி, அதிரடியாக விளையாடி வந்த சுனில் நரைனுக்கு சிறப்பாக கம்பெனி கொடுக்க சுனில் நரேன் லக்னோனியின் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தார். 


லக்னோ அணியில் யார் வந்து பந்து வீசினாலும் சிக்ஸர் பவுண்டரி பறக்கவிட்ட சுனில் நரைன் 27 பந்தில் தனது அரை சதத்தினை எட்டினார். தொடர்ந்து அதிரடியாக விளையாடி வந்தவர் 39 பந்தில் 81 ரன்கள் சேர்த்து தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். இவர் மொத்தம் ஆறு பவுண்டரி ஏழு சிக்ஸர் பறக்கவிட்டார்.


அடுத்துவந்த ரஸல் தனது விக்கெட்டினை 12 ரன்களுக்கும் ரகுவன்ஷி 32 ரன்களிலும் தங்களது விக்கெட்டினை இழந்து வெளியேறினர்.  இதனால் ஆட்டம் கொஞ்சம் லக்னோவின் கட்டுக்குள் வந்த மாதிரி இருந்தது. ஆனால் அதற்குள் கொல்கத்தா அணி 200 ரன்களுக்கு அருகில் இருந்ததால், கொல்கத்தா அணி 200 ரன்களை எட்டுவதை தடுக்க முடியவில்லை. 


இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 235ரன்கள் சேர்த்தது. லக்னோ அணி சார்பில் நவீன் உல் ஹக் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.