17 வது ஐபிஎல் தொடரின் 34-வது லீக் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதிக்கொண்டது. இந்தப் போட்டி லக்னோ அணியின் சொந்த மைதானமான இயக்னா மைதானத்தில் நடைபெற்றது. தனது சொந்த மைதானத்தில் களமிறங்கிய லக்னோ அணி எந்தவித சிரமமும் இல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை ஊதி தள்ளி தனது வெற்றியை அடைந்தது. 


இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்து வீச முடிவு செய்தது. இதன்படி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் ஆறு விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் சேர்த்தது. சென்னை அணி தரப்பில் ரவீந்திர ஜடேஜா 40 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்து இறுதி வரை களத்தில் இருந்தார். இறுதியில் களமிறங்கிய மகேந்திர சிங் தோனி 9 பந்துகளை எதிர் கொண்டு 28 ரன்கள் குவித்தார். இதனால் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 176 ரன்கள் சேர்த்தது. 


மிகச்சிறப்பான தொடக்கம்


177 ரன்கள் எடுத்தாள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி சிறப்பாக விளையாடியது. லக்னோ அணியின் இன்னிசை குயின் டன் டிக்காக் மற்றும் கேப்டன் கே எல் ராகுல் தொடங்கினர். இவர்கள் இருவரும் சென்னை அணியின் வேகப் பந்துவீச்சு மற்றும் சுழல் பந்துவீச்சினை சிறப்பாக கையாண்டு அணிக்கு ரன்கள் சேர்த்தனர். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பவுலர்கள் இவர்களின் விக்கெட்டை வீழ்த்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர்.  ஆனால், இவர்கள் இருவரும் சென்னை அணியின் பந்துவீச்சை தொடர்ந்து துவம்சம் செய்து வந்தனர்.  பவர் பிளேவில் லக்னோ அணி 54 ரன்கள் சேர்த்தது. தொடர்ந்து இருவரும் சிறப்பாக விளையாடியதால் கே எல் ராகுல் தனது அரை சதத்தினை நிறைவு செய்து அதிரடியாக விளையாடி வந்தார். இவர்கள் இருவரையும் சென்னை அணியால் பிரிக்கவே முடியவில்லை. 12 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி விக்கெட் இழப்பின்றி 110 ரன்கள் சேர்த்திருந்தது. இதனால் லக்னோ அன்னிக்கு அடுத்த எட்டு ஓவர்களில் வெற்றிக்கு 67 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. 


முதல் விக்கெட் வீழ்த்த போராடிய சென்னை - லக்னோ வெற்றி


ஆட்டத்தின் 15 வது ஓவரின் முதல் பந்தில் டிகாக் தனது அரை சதத்தினை நிறைவு செய்தார். அதேநேரத்தில் இந்த ஓவரின் கடைசி பந்தில் டி காக் தனது விக்கெட்டினை இழந்தார். முஸ்தபிசூர் வீசிய அந்த ஓவரில் தோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார் டி காக். ஆட்டத்தின் 15வது ஓவரில் லக்னொ அணி தனது முதல் விக்கெட்டினை இழந்தது அந்த அணியின் வெற்றியில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. அதேபோல் ஆட்டத்தின் 18வது ஓவரின் முதல் பந்தில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் 53 பந்தில் 82 ரன்கள் சேர்த்த நிலையில் வெளியேறினார். 


இறுதியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 19 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து ரன்கள் சேர்த்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இமாலய வெற்றியைப் பெற்றது.