Hardik- Rohit: ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
மும்பை - பஞ்சாப் மோதல்:
இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் நேற்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி ஓவரில் பஞ்சாப் கிங்ஸை வீழ்த்தி பரபரப்பான வெற்றியைப் பெற்றது. முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 7 விக்கெட்டுகளை இழந்து 192 ரன்களை சேர்த்தது. தொடக்கத்தில் பஞ்சாப் அணி அடுத்தடுஹ்து விக்கெட்டுகளை இழந்தாலும், இளம் வீரர்களான ஷஷாங்க் சிங் மற்றும் அசுதோஷ் ஷர்மா ஆகியோரின் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். பஞ்சாப் அணிய்ன் வெற்றிக்கு இறுதி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்ட போது தான், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சாளருக்கு சில முக்கிய ஆலோசனைகளை வழங்கினார்.
ரோகித் தந்த ஆலோசனை:
போட்டியின் கடைசி ஓவரை வீசிய ஆகாஷ் மத்வாலுக்கு, ரோகித் சர்மா ஆலோசனை தந்த வீடியோ தான் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், கடைசி ஓவரை வீச வந்த ஆகாஷ் மத்வாலுக்கு கேப்டன் ஹர்திக் பாண்ட்யா ஆலோசனைகளை வழங்கினார். அதேநேரம், ரோகித் சர்மா அங்கு வர, ஹர்திக் பாண்ட்யாவை கவனிக்காமல் ரோகித் சர்மாவின் ஆலோசனைகளை மத்வால் கவனமாக கேட்டுள்ளார். தான் எப்படி பந்து வீச போகிரேன், எனக்கு எங்கு எப்படி ஃபீல்டர்கள் வேண்டும் என்பதை மத்வால் கூற, அதற்கு ஏற்ப ரோகித்தும் மத்வாலுக்கு உதவுவது” போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஏற்கனவே, ரோகித் தான் எப்போதும் எங்களின் கேப்டன் என மும்பை இந்தியன்ஸ் அணியின் பெரும்பாலான ரசிகர்கள் இணையத்தில் முழங்குஇ வருகின்றனர். இந்நிலையில் ஹர்திக்கை கண்டுகொள்ளாமல், மத்வால் ரோகித்திடம் ஆலோசனைகளை பெற்ற வீடியோவை அவரது ரசிகர்கள் இணையத்தில் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.
புள்ளிப்பட்டியலில் மும்பை ஏற்றம்:
கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவைப்பட்டபோது, பஞ்சாப் அணி கூடுதலாக 2 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல்-அவுட்டானது. இதனால், 9 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. இதன் மூலம், நடப்பு தொடரில் மூன்றாவது வெற்றியை பதிவு செய்த மும்பை, புள்ளிப்பட்டியலில் 9வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.