17ஆவது ஐபிஎல் தொடரின் 34வது லீக் போட்டியில் நடப்புச் சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ அணிகள் மோதிக்கொண்டது. லக்னோவில் உள்ள இயக்னா மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச முடிவு செய்தது. 



கடந்த போட்டியில் மும்பையை துவம்சம் செய்த சென்னை அணி பிளேயிங் லெவனில் எந்த மாற்றமும் இல்லாமல் களம் இறங்கியது. சென்னை அணி லக்னோ அணியின் பந்துவீச்சை சிறப்பாக எதிர் கொண்டு இமாலய இலக்கை நிர்ணயிக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தபோது, ஆட்டத்தின் இரண்டாவது ஓவரின் முதல் பந்தில் ரச்சின் ரவீந்திரா கிளீன் போல்ட் ஆனார். இதை எடுத்து நிதானமாக விளையாடி வந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அனியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வார்டு 11 பந்தில் 17 ரன்கள் சேர்த்து நிலையில் தனது விக்கெட்டினை இழந்து வெளியேறினார். இரண்டு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் கலை இழந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பவர் பிளே முடிவில் 51 ரன்கள் சேர்த்து இருந்தது. தொடக்க வீரராக களம் இறங்கி பொறுப்பாகவும் நிதானமாகவும் விளையாடி வந்த ரஹானே உடன் சென்னை அணியின் தளபதியான ரவீந்திர ஜடேஜா இணைந்தார். இருவரும் ஓரளவுக்கு லக்னோ அணியின் சிறப்பான பந்துவீச்சினை தாக்குப்பிடித்து விளையாடி வந்த போது குரல் பாண்டியா வீசிய அட்டகாசமான சுழற்பந்தில் ரகானே கிளீன் போல்ட் ஆனார். 



அடுத்து வந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆறுச்சாமி சிவந்தூபே 8 பந்துகள் எதிர்கொண்டு மூன்று ரன்கள் சைனஸ் பந்தில் வெளியேறினார். சென்னையை அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். அதே நேரத்தில் லக்னோ அணி சிறப்பாக பந்துவீசி சென்னை அணிக்கு நெருக்கடியை கொடுத்துக் கொண்டே இருந்தது. 


இதனால் சென்னையை அணி ரஹ்மானே வெளியேற்றிவிட்டு இம்பாக்ட் பிளேயராக சமீர் ரிசீவியை களமிறக்கியது. ஆனால் அவரும் சொதப்பவே சென்னை அணி பெரும் நெருக்கடிக்கு உள்ளானது. இதனால் சென்னை அணி 12.2 ஓவரில் 90 பெண்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தத்தளித்துக்கொண்டு இருந்தது. 
தொடர்ந்து சிறப்பாக பந்து வீசிய லக்னோ அணி சென்னை அணிக்கு நெருக்கடி மேல் நெருக்கடியை கொடுத்து வந்தது. ஆனால் ஜடேஜா சிறப்பாக விளையாடி தனது அரைசதத்தினை நிறைவு செய்தது மட்டும் இல்லாமல் களத்தில் கடைசி வரை இருந்தார். ஆட்டத்தின் 19வது ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர் விளாசி மைதானத்தையே அலறவைத்தார் மொயின் அலி. ஆனால் அதேஓவரில் அவரும் தனது விக்கெட்டினை இழந்தார். 


20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 176 ரன்கள் சேர்த்தது. சென்னை அணியின் ஜடேஜா 40 பந்துகளில் 57 ரன்கள் சேர்த்தும், மகேந்திர சிங் தோனி 9 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்தும் இறுதிவரை களத்தில் இருந்தனர்.