ஐபிஎல் 2024ன் மூன்றாவது ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதுகிறது. இந்த போட்டியானது  கொல்கத்தாவில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. கடந்த ஆண்டு இரு அணிகளும் தலா இரண்டு போட்டிகளில் விளையாடி தலா ஒரு போட்டியில் வெற்றிபெற்றது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் இரண்டு சிறந்த வீரர்களும், ஐபிஎல் வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட இரண்டு வீரர்களும் நேருக்கு நேர் மோத இருக்கின்றனர். 

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயரும் கேப்டனாகவும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸும் உள்ளனர். இந்தநிலையில், கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் இன்றைய போட்டியில் எந்தெந்த வீரர்களுடன் களமிறங்கும்..? பிட்ச் அறிக்கை எப்படி என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

பிட்ச் ரிப்போர்ட்: 

இந்த போட்டி ஈடன் கார்டன் ஸ்டேடியத்தில் நடைபெறும் என்பதால் இன்றைய போட்டியில் இரு அணிகளும்  அதிரடியாக விளையாடி ரன்களை குவிக்கலாம். கடந்த போட்டிகளில் முடிவை பார்க்கையில் இன்று டாஸ் வெல்லும் அணி பேட்டிங் செய்து கெத்து காமிக்கலாம். 

பந்துவீச்சை பொறுத்தவரை, சுழற்பந்து வீச்சின் ஆதிக்கம் ஆரம்பம் முதலே தெரியும். சுனில் நாராயண், வருண் சக்ரவர்த்தி மற்றும் சுயாஷ் ஷர்மா போன்ற 3 சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் தங்களது ஆதிக்கத்தை வெளிபடுத்தலாம். இந்தப் போட்டியில் 180 அல்லது அதற்கு மேற்பட்ட ரன்கள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரு அணிகளும் நேருக்குநேர்: 

ஐபிஎல் வரலாற்றில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இதுவரை 25 முறை நேருக்குநேர் மோதியுள்ளது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 16 முறையும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 9 முறை வெற்றிபெற்றுள்ளது.

இரு அணிகளுக்கு இடையே அதிக ரன்கள் குவித்தவர்கள்: 

பேட்ஸ்மேன்கள் இன்னிங்ஸ் ரன்கள் அதிகபட்ச தனிநபர் ஸ்கோர்
டேவிட் வார்னர் (எஸ்ஆர்எச்) 15 619 126
நிதிஷ் ராணா (கேகேஆர்) 13 483 80
மணீஷ் பாண்டே (கேகேஆர், எஸ்ஆர்எச்) 15 438 61*

இரு அணிகளுக்கு இடையே அதிக விக்கெட்கள் எடுத்தவர்கள்: 

பந்து வீச்சாளர் இன்னிங்ஸ் விக்கெட்டுகள் சிறந்த பந்துவீச்சு
புவனேஷ்வர் குமார் (எஸ்ஆர்எச்) 22 24 3/19
ஆண்ட்ரே ரஸ்ஸல் (கேகேஆர்) 15 17 3/22
ரஷித் கான் (எஸ்ஆர்எச்) 12 12 3/19

வெற்றி யாருக்கு..? 

கொல்கத்தா அணியில் ரஹ்மானுல்லா குர்பாஸ், ஷ்ரேயாஸ் ஐயர், நிதிஷ் ராணா மற்றும் ரின்கு சிங் உள்ளிட்ட நட்சத்திர வீரர்கள் உள்ளனர். ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட், ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் போன்ற உலகத் தரம் வாய்ந்த பேட்ஸ்மேன்களைக் கொண்டுள்ளது. ஆடுகளத்தை பொருத்து சுழற்பந்து வீச்சு ஆதிக்கம் செலுத்தினால் கொல்கத்தா அணி வெற்றிபெற வாய்ப்புண்டு. 

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்: 

கொல்கத்தா நைட்ரைடர்ஸ்: 

ரஹ்மானுல்லா குர்பாஸ் (விக்கெட் கீப்பர்), வெங்கடேஷ் ஐயர், ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, ரிங்கு சிங், ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், மிட்செல் ஸ்டார்க், சுயாஷ் சர்மா, வருண் சக்ரவர்த்தி, ஹர்ஷித் ராணா

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, ஐடன் மார்க்ரம், ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், வாஷிங்டன் சுந்தர், பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஷாபா அகமது, புவனேஷ்வர் குமார், டி. நடராஜன்