Airtel Unlimited Data Offer: ஐபிஎல் தொடரை காணும் வகையில் அன்லிமிடெட் டேட்டா ஆஃபர்களை ஏர்டெல் தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.
ஐபிஎல் அட்டவணை:
இந்தியன் பிரீமியர் லீக் 2024ன் 17வது தொடர் மார்ச் 22ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் இடையேயான போட்டியுடன் தொடங்கியுள்ளது. ஐ.பி.எல்.லின் முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டது. அதன்படி, வருகின்ற ஏப்ரல் 7 ம் தேதி வரை நடைபெறும் போட்டிகளுக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
ஐ.பி.எல். நிர்வாகம் மீதமுள்ள போட்டிகளுக்கான தேதிகளை வரும் நாட்களில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நாளில் இரண்டு போட்டிகள் நடைபெற்றால், பகல்நேர போட்டி இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கும், மாலைநேர போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கும் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
ஐபிஎல் 2024 அணிகள்: சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ், பஞ்சாப் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய 10 அணிகள் இடம் பெற்றுள்ளன.
ஏர்டெல் ஆஃபர்கள்:
இந்நிலையில், ஐபிஎல் தொடர்களை காணும் வகையில், ஏர்டெல் தொலைத்தொடர்பு சேவை நிறுவனம் அன்லிமிடெட் டேட்டா ஆஃபர்களை அறிவித்துள்ளது.
39 ரூபாய் டேட்டா பேக்கை ரீசார்ஜ் செய்வதன் மூலம், ஒரு நாளைக்கு அன்லிமிடெட் டேட்டாக்களை பெறும் வகையில் ஆஃபரை அறிவித்துள்ளது.
49 ரூபாய் டேட்டா பேக்கை ரீசார்ஜ் செய்வதன் மூலம், ஒரு நாளைக்கு அன்லிமிடெட் டேட்டாக்களை பெறுவதுடன், விங்க் மியூசிக் செயலிக்கான 30 நாட்களுக்கான ப்ரீமியம்களை பெறும் வகையிலான ஆஃபர்களை அறிவித்துள்ளது.
79 ரூபாய் டேட்டா பேக்கை ரீசார்ஜ் செய்வதன் மூலம், இரண்டு நாளைக்கு அன்லிமிடெட் டேட்டாக்களை பெறும் வகையில் ஆஃபரை அறிவித்துள்ளது.
இந்த ஆஃபர்களை, ஏர்டெல் செயலி மூலமாக ரீசார்ஜ் செய்து பெற்று கொள்ளலாம்; அல்லது அருகில் ஏர்டெல் ரீசார்ஜ் மையங்கள் மூலமாக ரீசார்ஜ் செய்து பெற்று கொள்ளலாம்.
ஐபிஎல் ரசிகர்களாக உள்ள ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இந்த ஆஃபர்களை பயன்படுத்தி கிரிக்கெட் போட்டியை கண்டு களியுங்கள்