தற்போது நடைபெற்று வரும் இந்தியன் பிரீமியர் லீக் 2024 சீசன் பரபரப்பாக இறுதி கட்டத்தை நெருங்கி வருகிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மட்டுமே தற்போது பிளே ஆஃப்க்கு தகுதிபெற்றுள்ளது. இதற்கிடையில், மீதமுள்ள இரண்டு இடங்களுக்கு இன்னும் 5 அணிகள் போட்டியிடுகின்றன. 


டெல்லி அணிக்கு வாய்ப்புள்ளதா..? 


இந்தியன் பிரீமியர் லீக் 2024க்கான ப்ளே ஆஃப் பந்தயத்தில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு இன்னும் வாய்ப்புள்ளது. ஆனால், அப்படி வாய்ப்பு இருக்கிறது என்றால், அதற்கு அதிசயங்கள் சில நடக்க வேண்டும். இது ஆனால், எவ்வளவு தூரம் சாத்தியம் என்பது தெரியவில்லை.


நேற்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணுக்கு எதிரான போட்டியில் டெல்லி கேபிட்டல்ஸ் அணி 19 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதையடுத்து, இதுவரை இந்த சீசனில் 14 போட்டிகளில் விளையாடி தனது லீக் கட்டத்தை முடித்த டெல்லி அணி, 7 வெற்றிகள் மற்றும் 7 தோல்விகளுடன் 14 புள்ளிகளை பெற்றுள்ளது. -0.377 நிகர ரன் ரேட்டுடன் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, தற்போது புள்ளிகள் பட்டியலில் 5வது இடத்தில் உள்ளது. 






14 புள்ளிகளுடன் டெல்லி கேப்பிடல்ஸ், ஐபிஎல் 2024ன் பிளே ஆஃப்களுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் அவர்களின் மோசமான நிகர ரன் ரேட் ட் -0.377 காரணமாக குறைவாகவே உள்ளன. இப்போது, ​​ஐபிஎல் 2024 பிளேஆஃப்க்கு டெல்லி கேப்பிடல்ஸ் தகுதிபெற மற்ற போட்டிகளின் முடிவுகளைப் பொறுத்து காத்திருக்க வேண்டும்.


2 போட்டிகளிலும் தோற்குமா ஹைதராபாத்..? 


தற்போது 14 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் இருக்கும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, மீதமுள்ள இரண்டு போட்டிகளிலும் மிகப்பெரிய ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தால் டெல்லி கேப்பிடல்ஸ் ஐபிஎல் 2024 பிளே ஆப்களுக்கு செல்ல முடியும். உதாரணத்திற்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இரண்டு போட்டிகளையும் சேர்த்து 194 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைய வேண்டும். அப்போது, ஹைதராபாத் அணியின் ரன் ரேட் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு கீழ் குறையும். தற்போது சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தின் ரன் ரேட்  +0.406 ஆகவும், டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ரன் ரேட் -0.377 உள்ளது. 


டெல்லி அணி தகுதிபெற இதுவும் நடக்க வேண்டும்..!


மேலும், டெல்லி கேபிட்டல்ஸ் அணி ஐபிஎல் 2024 பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறும் வாய்ப்புகளை அதிகரிக்க, வருகின்ற மே 18ம் தேதி நடைபெறும் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை தோற்கடிக்க வேண்டும். 






ஒட்டுமொத்தமாக வாய்ப்பு இல்லை ராஜா: 


டெல்லி கேபிட்டல்ஸ் ஐபிஎல் 2024 ப்ளே ஆஃப் சுற்று பந்தயத்தில் இன்னும் கணித ரீதியாக உள்ளது. ஆனால், இதற்கு பிறகு டெல்லி கேப்பிடல்ஸுக்கு எந்தவொரு போட்டியும் இல்லை. இது ஹைதராபாத், சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு சாதகமாக உள்ளது. இருப்பினும், ஐபிஎல் 2024 பிளே ஆஃப்களுக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணி தகுதி பெறுவது சாத்தியமில்லை