ஐ.பி.எல் 2024:


கடந்த மார்ச் 22 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல் சீசன் 17 விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் இதுவரை 46 லீக் போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. ஒவ்வொரு அணி வீரர்களும் இந்த ஐபிஎல் போட்டிகளில் தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி வீரர்கள் மற்றும் இங்கிலாந்து அணியின் கிரிக்கெட் வீரர்கள் தான் இந்த ஐபிஎல் போட்டியிலும் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றனர். அது தொடர்பான தகவல்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்:


ஜோஸ் பட்லர்:


ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ஐ.பி.எல் சீசன் 17ன் 19 வது லீக் போட்டி ஏப்ரல் 6 ஆம்  நடைபெற்றது. இந்த போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதேபோல், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிராக தன்னுடைய 100 வது போட்டியை விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர் ஜோஸ் பட்லர் சிக்ஸர் அடித்து சதம் விளாசினார்.
முதலில் களம் இறங்கிய பெங்களூரு அணி 183 ரன்கள் எடுத்தது. பின்னர் 184 ரன்கள் என்ற இலக்குடன் களம் இறங்கியது ராஜஸ்தான் அணி. இதில் தன்னுடைய 100வது ஐ.பி.எல் போட்டியில் அதிரடியாக விளையாடிக்கொண்டிருந்தார் ஜோஸ் பட்லர். 17 வது ஓவரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு வெற்றி பெற 14 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் நின்ற துருவ் ஜூரல் விக்கெட்டை பறிகொடுத்தார். பின்னர் ஷிம்ரோன் ஹெட்மியர் பட்லருடன் ஜோடி சேர்ந்தார். 19 வது ஓவரை பெங்களூரு அணி வீரர் முகமது சிராஜ் வீசினார். இரண்டு பந்துகளை டாட் வைத்தார்.


மூன்றவது பந்தில் பவுண்டரி விளாசினார் ஹெட்மியர். நான்காவது பந்தில் சிங்கிள் தட்ட கடைசி பந்தில் பட்லர் ஒரு சிங்கிள் தட்டினார். 19 வது ஓவரின் முடிவில் ராஜஸ்தான் அணி 183 ரன்கள் எடுத்து இருந்தது; ஜோஸ் பட்லர் 94 ரன்கள் எடுத்து இருந்தார். கடைசி ஓவரில் 1 ரன் எடுத்தால் வெற்றி 6 ரன்கள் எடுத்தால் தன்னுடைய ஐ.பி.எல் சதம் என்ற நிலையில் கேமரூன் கிரீன் வீசிய 20 ஓவரின் முதல் பந்தை பரபரப்பான நிமிடங்களுக்கு மத்தியில் சிக்ஸருக்கு பறக்க விட்டார் பட்லர். ராஜஸ்தான் அணி ரசிகர்களின் கர ஓசைகளுக்கு மத்தியில் தன்னுடைய 100 வது ஐ.பி.எல் போட்டியில் சிக்ஸர் அடித்து அணியின் வெற்றியுடன் சதத்தை பதிவு செய்தார். அந்த வகையில் 58 பந்துகளில் 9 பவுண்டரி 4 சிக்ஸர்கள் என மொத்த 100 ரன்களை குவித்தார் ஜோஸ் பட்லர் அந்த போட்டியில் அசத்தி இருந்தார். 



ஜானி பேர்ஸ்டோவ்:


கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற்ற 42 ஆவது ஐபிஎல் லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங்கை தொடங்கிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆறு விக்கெட் இழப்பிற்கு 261 ரன்களை குவித்தது. 


பின்னர் இலக்கை நோக்கி களம் இறங்கியது பஞ்சாப் கிங்ஸ் அணி. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிரப்சிம்ரன் சிங் மற்றும் பேர்ஸ்டோவ் களம் இறங்கினார்கள். இதில் பிரப்சிம்ரன் சிங் வெறும் 20 பந்துகளில் நான்கு பவுண்டரிகள் மற்றும் ஐந்து சிக்ஸர்களை விளாசி 54 ரன்கள் குவித்தார். மறுபுறம் கடந்த இரண்டு போட்டிகளில் ஓரங்கட்டப்பட்டிருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி வீரர் பேர்ஸ்டோவ் தான் யார் என்பதை நிரூபித்துக் கொண்டிருந்தார். 


இவர்களது ஜோடி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினரின் பந்துகளை சிக்ஸரும் கவுண்டர்களாக பறக்க இவர்களது ஜோடி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினரின் பந்துகளை சிக்ஸரும் பௌண்டரிகளையும் பறக்கவிட்டது. இவ்வளவு ரன்களை டி20 போன்ற போட்டிகளில் சேஸ் செய்வது என்பது கடினமான ஒன்று. ஆனால் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பேர்ஸ்டோவ் மற்றும் சசாங் சிங் அதிரடி ஆட்டத்தால் சர்வதேச உலக டி20 போட்டி வரலாற்றில் ஒரு புதிய சாதனையை படைத்தனர். அந்த வகையில் கடைசிவரை களத்தில் நின்ற சசாங் சிங் 28 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் 8 சிக்ஸர்களை விளாசி 68 ரன்களை குவித்தார். மறுபுறம் பேர்ஸ்டோவ் கடைசி வரை களத்தில் நின்று 48 பந்துகளில் எட்டு பவுண்டரி மற்றும் 9 சிக்ஸர்கள் என மொத்தம் 108 ரன்களை மொத்தம் 108 ரன்களை குவித்தார். 



பிலிப் சால்ட்:


கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி கொல்கத்தாவில் உள்ள ஈடர்ன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற 42 வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பிலில் சால்ட் மற்றும் சுனில் நரேன்சுனில் நரைன் களம் இறங்கினார்கள். இவர்களது ஜோடி அதிரடியான தொடக்கத்தை பவர்ப்ளேயில் பெற்றுக்கொடுத்தது. இருவரும் தங்களது வெறித்தனமான பேட்டிங்கை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக வெளிப்படுத்தினர். இவர்களது பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியாமல் பஞ்சாப் கிங்ஸ் அணியின் பந்து வீச்சாளர்கள் திணறினார்கள்.


அதன்படி இவர்களது பார்ட்னர்ஷிப் 138 ரன்களை குவித்தது. 10.2 வது ஓவரில் தான் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி முதல் விக்கெட்டையே இழந்தது.  ருத்ரதாண்டவம் ஆடிக்கொண்டிருந்த  பிலிப் சால்ட் மொத்தம் 37 பந்துகள் களத்தில் நின்று 6 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் என மொத்தம் 75 ரன்களை குவித்தார். 


வில் ஜாக்ஸ்:


குஜராத் டைட்டன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஜ்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையேயான 45 லீக் போட்டி ஏப்ரல் 28 ஆம் தேதி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் களம் இறங்கிய குஜராத் டைட்டன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது. பின்னர் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி16 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டியது. 


முக்கியமாக இந்த போட்டியில் வில் ஜாக்ஸ் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். தன்னுடைய அதிரடி ஆட்டத்தால் குஜராத் டைட்டன்ஸ் அணியின் பந்து வீச்சாளர்களை மிரட்டினார் ஜாக்ஸ். மோஹித் சர்மா வீசிய 15 வது ஓவரில் இவருடைய ஆட்டம் தாருமாறாக இருந்தது. இந்த ஓவரில் மட்டும் 4 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரியை பறக்கவிட்டார். வெறும் 31 பந்துகளில் அரைசதம் விளாசிய இவர் அடுத்த 10 பந்துகளில் சதத்தை எட்டினார். அதாவது அடுத்த 10 பந்துகளில் 48 ரன்களை குவித்தார். கடைசி வரை களத்தில் நின்ற வில் ஜாக்ஸ் 41 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 10 சிக்ஸர்களை விளாசி 100 ரன்கள் விளாசி அசத்தினார்.


ட்ராவிஸ் ஹெட்:


அந்தவகையில் கடந்த ஏப்ரல் 20 ஆம் தேதி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிவரும் ட்ராவிஸ் ஹெட் ருத்ர தாண்டவம் ஆடினார். வெறும் 16 பந்துகளில் 7 பவுண்டரி, 4 சிக்ஸர்கள் என 52 ரன்கள் எடுத்து அதிவேக அரைசதத்தை பதிவு செய்தார். மொத்தம் 32 பந்துகள் களத்தில் நின்ற ட்ராவிஸ் ஹெட் 16 பவுண்டரிகள் 6 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 89 ரன்கள் எடுத்தார். அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் ட்ராவிஸ் ஹெட் 63 ரன்கள் எடுத்து அசத்தினார். 


மார்கஸ் ஸ்டோனிஸ்:


சேப்பாக்கம் மைதானத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற்ற 39 வது லீக் போட்டியில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் களம் இறங்கிய சி.எஸ்.கே 210 ரன்கள் எடுத்தது. பின்னர் இலக்கை நோக்கி களம் இறங்கியது லக்னோ அணி. இந்த போட்டியில் லக்னோ அணிக்காக விளையாடிய வரும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த மார்கஸ் ஸ்டோனிஸ் அதிரடியாக விளையாடி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை வெற்றிபெறச் செய்தார். கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 26 பந்துகளில் அரைசதம் விளாசினார் மார்கஸ் ஸ்டோனிஸ். அந்தவகையில் கடைசி வரை களத்தில் நின்ற ஸ்டோனிஸ் 63 பந்துகளில் 13 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள் உட்பட மொத்தம் 124 ரன்களை குவித்தார்.


ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க்:


ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இளம் வீரற் ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க். இவர் இந்த ஐபிஎல் சீசனில் தான் அறிமுகமாகி இருக்கிறார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 15 பந்துகளில் அரைசதம் விளாசினார். 18 பந்துகள் மட்டுமே களத்தில் நின்ற மெக்குர்க் 5 பவுண்டரிகள் மற்றும் 7 சிக்ஸர்கள் என மொத்தம் 65 ரன்களை குவித்தார். இதுவரை அவர் விளையாடிய 3 போட்டிகளில் 2 அரைசதங்கள் விளாசி அசத்தி உள்ளார்.


இவ்வாறாக இந்த ஐபிஎல் சீசனில் ஆஸ்திரேலிய வீரர்கள் மற்றும் இங்கிலாந்து வீரர்கள் அதிரடியாக விளையாடி வருவது டி20 உலகக் கோப்பையில் இந்தியாவை மிரட்டும் என்று ரசிகர்கள் அஞ்சுகின்றனர்.