இந்தியன் பிரீமியர் லீக்கின் 56வது போட்டியில் இன்று டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதவுள்ளது. இந்தப் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7. 30 மணிக்கு நடைபெறுகிறது. 


புள்ளிப்பட்டியலில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அதே நேரத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி 10 புள்ளிகளுடன் ஆறாவது இடத்தில் உள்ளது. இந்தநிலையில், இன்றைய போட்டியில் ராஜஸ்தானை டெல்லி வீழ்த்தினால் முதல் 4 இடங்களுக்குள்ளும், டெல்லியை ராஜஸ்தான் வீழ்த்தினால் பிளே ஆஃப்க்கும் செல்லும். 


டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஐபிஎல் வரலாற்றில் இதுவரை 28 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில் அதிகபட்சமாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 15 முறையும், டெல்லி அணி 13 முறையும் வெற்றி பெற்றுள்ளன. 


டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகள் இதுவரை அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் 8 முறை மோதியுள்ளன. அதில், அதிகபட்சமாக டெல்லி 5 போட்டிகளிலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. இந்த ஸ்டேடியத்தில் டெல்லி மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையேயான கடைசி போட்டி கடந்த 2019ம் தேதி நடைபெற்றது. ராஜஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 115 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு பேட்டிங் செய்த டெல்லி அணி 16.1 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து வெற்றி இழக்கை எட்டியது. 


கடந்த 5 ஐபிஎல் போட்டிகளில் DC vs RR ஹெட்-டு-ஹெட் சாதனை



  • 2024 - ராஜஸ்தான் 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  • 2023- ராஜஸ்தான் 57 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  • 2022- டெல்லி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  • 2022- ராஜஸ்தான் 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  • 2021 - டெல்லி 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


அருண் ஜெட்லி பிட்ச் அறிக்கை: 


ஐபிஎல் தொடரில் இன்று டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஆட்டம் டெல்லி அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது. நடப்பு சீசனில் இந்த பிட்ச்சில் முதலில் பேட்டிங் செய்யும்போதும் அல்லது இலக்கை துரத்தும்போதும் நிறைய ரன்கள் குவிக்கப்பட்டது. எனவே, இன்றைய போட்டியும் அதிக ரன்கள் குவிக்கும் போட்டியாக இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பார்கள். அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடப்பு சீசனில் மூன்று போட்டிகள் மட்டுமே நடந்துள்ளன. மொத்தமாக நடைபெற்ற 6 இன்னிங்ஸ்களில் ஒரு இன்னிங்ஸை தவிர, மற்ற 5 இன்னிங்ஸ்களில் 200 ரன்களுக்கு மேல் அடிக்கப்பட்டது. மேலும், இந்த பிட்ச் அவ்வபோது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாகவும் செயல்படுகிறது. 


கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்: 


டெல்லி கேபிடல்ஸ் அணி:


ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், அபிஷேக் போரல், ஷாய் ஹோப், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், ரிஷப் பந்த் (கேப்டன், விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், குமார் குஷாக்ரா, குல்தீப் யாதவ், கலீல் அகமது, லிசாத் வில்லியம்ஸ், முகேஷ் குமார் வில்லியம்ஸ்


இம்பேக்ட் வீரர்: ரசிக் சலாம்


ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:


ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், ரோவ்மன் பவல், துருவ் ஜூரல், ஆர் அஷ்வின், டிரென்ட் போல்ட், அவேஷ் கான், சந்தீப் சர்மா


இம்பேக்ட் வீரர்: யுஸ்வேந்திர சாஹல்