ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நேற்று நடைபெற்ற முக்கியமான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு – சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் செல்ல முடியும் என்ற சூழலில் நடைபெற்ற போட்டி என்பதால், இரு அணிகளும் வெற்றிக்காக தீவிரமாக போராடினர். இறுதிவரை பரபரப்புடன் நடைபெற்ற இந்த போட்டியில் பெங்களூரு வெற்றி பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றது.


மணக்கோலத்தில் ஆர்.சி.பி. ரசிகர் செய்த காரியம்:


இந்த போட்டியை நேரில் மட்டுமின்றி தொலைக்காட்சி, செல்போன்களில் கோடிக்கணக்கான ரசிகர்கள் கண்டுகளித்தனர். இந்த சூழலில், கர்நாடகாவில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் இருக்கும் மணமக்களை ஒளிபரப்பு செய்வதற்காக எல்.இ.டி. திரை வைக்கப்பட்டு இருந்தது.


ஆனால், அந்த திரையில் ஆர்.சி.பி. – சென்னை அணிகள் மோதிய ஆட்டம் நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டுக் கொண்டிருந்தது. இந்த போட்டியை திருமணத்திற்கு வந்த உறவினர்கள், விருந்தினர்கள் கண்டு களித்துக் கொண்டிருந்தனர். சென்னை வீசிய கடைசி ஓவரில் ஆர்.சி.பி. பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது, மணமகனே கழுத்தில் மாலையுடன் மேடையில் இருந்து கீழே வந்து தனது நண்பர்கள், உறவினர்களுடன் சேர்ந்து ஆர்.சி.பி. என்று கோஷமிட்டு போட்டியை ரசித்தார்.






காத்திருந்த மணமகள்:


மாப்பிள்ளை கீழே நின்று கிரிக்கெட் போட்டியை ரசித்த நிலையில், மணமகள் மற்றும் உறவினர்கள் மட்டும் மேடையில் மாப்பிள்ளை எப்போது வருவார்? என்று காத்திருந்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இன்று முகூர்த்த நாள் என்பதால் பல இடங்களில் திருமணம் உள்பட வைபோக நிகழ்வுகள் நடந்தது. இதற்காக நேற்று இரவு திருமண வரவேற்பு நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.


அவ்வாறு நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சியில்தான் மணமகன், மணமகள் மற்றும் உறவினர்களை தவிக்கவிட்டு ஆர்.சி.பி. பேட்டிங்கை பார்க்கச் சென்றதை அந்த அணியின் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். நேற்றைய போட்டியில் குறிப்பிட்ட ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியுடன் பந்துவீசிய பெங்களூரு அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்தது.


மேலும் படிக்க: Rohit Sharma: எல்லாமே வியூஸுக்காகவா? : ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மீது ரோஹித் ஷர்மா ஆவேசம்


மேலும் படிக்க: RCB: நம்ப முடியாத கம்பேக்! "இறுதிவரை போராடுங்கள்" ஆர்.சி.பி. கற்றுத்தரும் பாடம் இதுதான்!