17வது சீசன் ஐபிஎல் தொடருக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. முதற்கட்ட அட்டவணை மார்ச் 22ஆம் தேதி முதல் ஏப்ரல் 7ஆம் தேதி வரைக்குமான போட்டிகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அதாவது மார்ச் மாதம் 25ஆம் தேதி முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் சென்னை அணிக்கு மீதமுள்ள போட்டிகள் எப்போது எங்கு யாருடன் நடைபெறவுள்ளது என்பதை இங்கு விரிவாகக் காணலாம். 


சென்னையின் போட்டிகள்:


நடப்புச் சாம்பியனாக உள்ள சென்னை அணி தனது முதல் போட்டியில் பெங்களூரு அணிக்கு எதிராக களமிறங்கி வெற்றி பெற்றது. இந்நிலையில் சென்னை அணிக்கு மீதமுள்ள 13  லீக் போட்டிகள் குறித்து பார்க்கலாம். 


 சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் - சென்னை - மார்ச் 26, மாலை 7.30 மணி


சென்னை சூப்பர் கிங்ஸ் - டெல்லி கேப்பிடல்ஸ் - விசாகப்பட்டினம் - மார்ச் 31, மாலை 7.30 மணி


சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ஹைதராபாத் - ஏப்ரல் 5, மாலை 7.30 மணி


சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சென்னை - ஏப்ரல் 8, மாலை 7.30 மணி


சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் - மும்பை - ஏப்ரல் 14, மாலை 7.30 மணி


சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - லக்னோ - ஏப்ரல் 19, மாலை 7.30 மணி


சென்னை சூப்பர் கிங்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - சென்னை - ஏப்ரல் 23, மாலை 7.30 மணி


சென்னை சூப்பர் கிங்ஸ் - சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - சென்னை - ஏப்ரல் 28, மாலை 7.30 மணி


சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் - சென்னை - மே 01, மாலை 7.30 மணி


சென்னை சூப்பர் கிங்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் - தர்மசாலா - மே 5, பிற்பகல் 3.30 மணி


சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் - அகமதாபாத் - மே 10, மாலை 7.30 மணி


சென்னை சூப்பர் கிங்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் - சென்னை - மே 12, பிற்பகல் 3.30 மணி


சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - பெங்களூரு - மே 18, மாலை 7.30 மணி  






சென்னையில் எத்தனை போட்டிகள்?


அட்டவணையின் அடிப்படையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்னும் ஆறு லீக் போட்டிகளில் சென்னையில் விளையாடவுள்ளது. 7 போட்டிகளில் வெளி மைதானங்களில் விளையாடவுள்ளது. சென்னை அணியின் மிகவும் முக்கியமான போட்டிகளில் ஒன்றாக பார்க்கப்படுவது மும்பை அணியுடனான போட்டிதான். இந்த போட்டி ஏப்ரல் 14ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதேபோல் தமிழ்நாட்டில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெறவுள்ளது. அந்த தினத்தில் சென்னை அணி, லக்னோ அணிக்கு எதிராக லக்னோவில் விளையாடுகின்றது.