இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2024ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இடம்பிடித்திருந்த டெவோன் கான்வே காயம் காரணமாக விலகியுள்ளார். 


நியூசிலாந்து அணியின் தொடக்க வீரரான கான்வெ, கடந்த 2022 மற்றும் 2023 ஐபிஎல் சீசன்களில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். இதுவரை 23 போட்டிகளில் விளையாடியுள்ள இவர், 9 அரைசதங்களுடன் 924 ரன்கள் எடுத்துள்ளார். ஐபிஎல்லில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 92 ரன்கள் ஆகும். 






இதையடுத்து, 2024 ஐபிஎல் சீசனில் டெவோன் கான்வேக்கு பதிலாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரிச்சர்ட் க்ளீசனை சேர்த்துள்ளது. வலது கை வேகப்பந்து வீச்சாளரான  ரிச்சர்ட் க்ளீசன் இங்கிலாந்து அணிக்காக 6 டி20 போட்டிகளில் விளையாடி 9 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், ஒட்டுமொத்தமாக க்ளீசன் 90 டி20 போட்டிகளில் விளையாடி 101  விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.