இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் கே.எல்.ராகுலின் பிறந்தநால் இன்று. கே.எல்.ராகுலின் முழுப்பெயர் கண்ணூர் கோகேஷ் ராகுல். இதை சுருக்கி பெரும்பாலும் கே.எல், கே.எல்.ராகுல் அல்லது லோகேஷ் ராகுல் என்று செல்லமாக அழைப்பர்.


கே.எல்.ராகுல் கடந்த 1992ம் ஆண்டு ஏப்ரல் 18ம் தேதி பிறந்தார். இன்றுடன் இவருக்கு 32 வயது ஆகிறது. இவரது தந்தையின் பெயர் டாக்டர் கே.என்.லோகேஷ், இவர் ஒரு பொறியாளர். இவரது தாயாரின் பெயர் ராஜேஸ்வரி, இவர் ஒரு கல்லூரியின் பேராசிரியர். 


கே.எல்.ராகுல் ஒரு பொறியாளராக ஆக வேண்டும் என்று அவரது தந்தை லோகேஷ் ஆசைப்பட்டார். ஆனால், சிறு வயது முதலே கே.எல்.ராகுலுக்கு கிரிக்கெட்டின் மீது அதீத ஆர்வம் இருந்தது. தனது 11 வயதில் கிரிக்கெட்டை வாழ்க்கையாக எடுத்துக்கொண்ட கே.எல்.ராகுல், இன்று இந்திய கிரிக்கெட் அணியின் பேட்ஸ்மேனாகவும், ஐபிஎல் 2024ல் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் கேப்டனாகவும் இருந்து வருகிறார். 


இன்று கே.எல். ராகுல் இந்திய கிரிக்கெட் அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக வலம் வருகிறார். மேலும், ராகுல் கிரிக்கெட் விளையாட்டில் தனக்கென ஒரு பெயரை உருவாக்கி வைத்துள்ளார். 11 வயதில் கிரிக்கெட்டை தீவிரமாக எடுத்துக்கொண்ட கே.எல்.ராகுல், கடந்த 2010ம் ஆண்டு கர்நாடகா அணிக்காக தனது முதல் தர போட்டியில் களமிறங்கினார். 


சர்வதேச கிரிக்கெட்டில் கே.எல்.ராகுல் எப்படி..? 


இந்திய அணிக்காக கே.எல்.ராகுல் கடந்த 2014ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட்டிலும், கடந்த 2026ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட்டிலும் அறிமுகமானார். இதுவரை 50 சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2 ஆயிரத்து 863 ரன்கள் குவித்துள்ளார். அதேபோல், 75 ஒருநாள் போட்டிகளில் 2820 ரன்களும், 72 டி20 போட்டிகளில் 2265 ரன்களும் எடுத்துள்ளார். ஒட்டுமொத்தமாக 197 சர்வதேச போட்டிகளில் விளையாடி 54 அரைசதங்கள் மற்றும் 17 சதங்களுடன் 7,948 ரன்கள் குவித்துள்ளார்.






கே.எல்.ராகுலின் மேலும் சில சாதனைகள்..



  • ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் சதம்.

  •  தென்னாப்பிரிக்காவில் டெஸ்ட் சதம்.

  • இங்கிலாந்தில் டெஸ்ட் சதம்.

  • வெஸ்ட் இண்டீசில் டெஸ்ட் சதம்.

  • இலங்கையில் டெஸ்ட் சதம்.

  • லார்ட்ஸ் மைதானத்தில் டெஸ்ட் சதம்

  • டி20யில் நம்பர் 4, நம்பர் 3வது இடத்தில் களமிறங்கி சதம். 

  • தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய மண்களில் சதம்

  • ஒருநாள் அறிமுக போட்டியில் சதம்

  • ஒருநாள் உலகக் கோப்பை ஒரே பதிப்பில் இந்திய அணிக்காக விக்கெட் கீப்பராக அதிக ரன்கள் எடுத்தவர்

  • ஒருநாள் உலகக் கோப்பையில் இந்திய அணிக்காக அதிவேக சதம்

  • டி20 போட்டிகளில் அதிவேகமாக 3000 ரன்கள்


உள்ளிட்ட பல்வேறு வெளிநாட்டு மண்ணில் சதம் அடித்துள்ளார். மேலும், டெஸ்ட், ஒருநாள், டி20 மற்றும் ஐபிஎல் போட்டிகளில் சதம் அடித்த மூன்றாவது இந்திய வீரர் என்ற பெருமையை கேஎல் ராகுல் பெற்றார். இதற்கு முன்னதாக, இந்த சாதனையை இந்திய அணியின் தற்போதைய கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் முன்னாள் கேப்டன் விராட் கோலி படைத்திருந்தனர்.


மேலும், கே.எல்.ராகுல் 2013ம் ஆண்டு ஐபிஎல்லில் பெங்களூரு அணிக்காக அறிமுகமானார். தனது 11 ஆண்டுகால ஐபிஎல் வாழ்க்கையில், ராகுல் மொத்தம் 124 போட்டிகளில் விளையாடி 4 சதங்கள் உள்பட 4367 ரன்களை எடுத்துள்ளார்.