IPL 2024 Points Table: ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடத்தில் நீடிக்கிறது.

ஐபிஎல் 2024 கோலாகலம்:

சர்வதேச அளவில் அதிகம் பணம் புரளும் கிரிக்கெட் தொடராக உள்ள ஐபிஎல், ஒவ்வொரு ஆண்டின் கோடைக்காலத்திலும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைகிறது. அந்த வகையில் நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. போட்டிகளை காண நேரடியாக மைதானங்களில் குவிவது மட்டுமின்றி,  தொலைக்காட்சி மற்றும் செல்போன் திரைகளிலும் ரசிகர்கள் குவிகின்றனர். அவர்களுக்கு இது பொழுதுபோக்காக இருந்தாலும், வெற்றியின் மூலம் கிடைக்கும் ஒவ்வொரு புள்ளியும் அணிகளுக்கு மிக முக்கியமாகும். அந்த புள்ளிகளின் அடிப்படையில் தான் லீக் சுற்றின் முடிவில் நான்கு அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும்.

புள்ளிப்பட்டியல் விவரம்:

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் அண்மையில் தான் தொடங்கிய நிலையில், 8 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ஐதராபாத் அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இருப்பினும், ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலிடத்தில் நீடிக்கிறது.

எண் அணி போட்டிகள் வெற்றி தோல்வி புள்ளிகள்
1 சென்னை சூப்பர் கிங்ஸ் 2 2 0 4
2 ராஜஸ்தான் ராயல்ஸ் 1 1 0 2
3 சன்ரைசர்ஸ் ஐதராபாத் 2 1 1 2
4 கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 1 1 0 2
5 பஞ்சாப் கிங்ஸ் 2 1 1 2
6 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் 2 1 1 2
7 குஜராத் டைட்டன்ஸ் 2 1 1 2
8 டெல்லி கேபிடல்ஸ் 1 0 1 0
9 மும்பை இந்தியன்ஸ் 2 0 2 0
10 லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 1 0 1 0

இன்றைய போட்டி:

இன்று நடைபெறும் தொடரின் 9வது லீக் போட்டியில் ராஜஸ்தான் மற்றும் டெல்லி அணிகள் மோத உள்ளன. இதில் 2வது இடத்தில் உள்ள ராஜஸ்தான் அணி மிகப்பெரிய வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில், முதல் இடத்திற்கு முன்னேறக்கூடும். ஒருவேளை 8வது இடத்தில்  உள்ள டெல்லி அணி வெற்றி பெற்றால், புள்ளிப்பட்டியலில் 7வது இடத்திற்கு முன்னேறக்கூடும். 

பிளே-ஆஃப் சுற்று:

தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் லீக் சுற்றில் தலா 14 போட்டிகளில் விளையாடும். அதன் முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும். அதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் முதல் தகுதிச்சுற்று போட்டியில் விளையாடும். வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதிபெறும். புள்ளிப்பட்டியலில் 3 மற்றும் நான்காவது இடங்களை பிடிக்கும் அணிகள் முதல் எலிமினேட்டரில் விளையாடும். அதில் வெற்றி பெறும் அணி இரண்டாவது தகுதிச்சுற்று போட்டிக்கு முன்னேறும். அந்த அணியும், முதல் தகுதிச்சுற்று போட்டியில் தோல்வியுற்ற அணியும் மோதும். அதில் வெற்றி பெறும் அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும்.