IPL 2024 Points Table: ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான லீக் போட்டியில் வென்று, பெங்களூர் அணி நடப்பு தொடரில் இரண்டாவது வெற்றியை பதிவு செய்துள்ளது. 

ஐபிஎல் புள்ளிப்பட்டியல் விவரம்:

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி கோலாகளமாக நடைபெற்று வருகிறது, தற்போது வரை 41 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று நடைபெற்ற  லீக் போட்டியில் பெங்களூர் மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் மோதின. ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி, 6 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கோலி மற்றும் பட்டிதார் ஆகியோர் அரைசதம் விளாசினார். இலக்கை நோக்கி களமிறங்கிய ஐதராபாத் அணியில் ஷபாஸ் அகமது, அபிஷேக் சர்மா மற்றும் கம்மின்ஸ் தவிர மற்ற் வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இதனா, பெங்களூர் அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பட்டிதார் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின் மூலம், நடப்பு தொடரில் ஏற்கனவே ஐதராபாத்திடம் பெற்ற தோல்விக்கு பெங்களூர் அணி பழிவாங்கியுள்ளது.

எண் அணி போட்டிகள் வெற்றி தோல்வி புள்ளிகள்
1  ராஜஸ்தான் ராயல்ஸ் 8 1 1 14
  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 7 5 2 10
3 சன்ரைசர்ஸ் ஐதராபாத் 8 5 2 10
4 லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 8 5 3 10
5 சென்னை சூப்பர் கிங்ஸ் 8 4 4 8
6 டெல்லி கேபிடல்ஸ் 9 4 5 8
7 குஜராத் டைட்டன்ஸ் 9 4 5 6
8 மும்பை இந்தியன்ஸ் 8 3 5 6
9 பஞ்சாப் கிங்ஸ் 8 2 6 4
10 ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 9 2 7 4

இன்றைய போட்டி:

இன்று நடைபெறும் தொடரின் 42வது லீக் போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ்  மற்றும் ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் ஆகிய அணிகள் மோத உள்ளன. இதில் புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ள கொல்கத்தா அணி வெற்றி பெற்றால் தனது இடத்தை மேலும் இறுகப்பற்றிக் கொள்ளும். 8வது இடத்தில் உள்ள பஞ்சாப் அணி வெற்றி பெற்றால், புள்ளிப்பட்டியலில் 8வது இடத்திற்கு முன்னேறக்கூடும்.  நடப்பு தொடரில் ஏற்கனவே இரு அணிகளும் மோதிய போட்டியில், உள்ளூர் மைதானத்தில் பஞ்சாப் அணி தோல்வியை சந்தித்தது. இதற்கு பழிவாங்கும் நோக்கில் அந்த அணி இன்று களம் காண உள்ளது. ஐபில் போட்டிகளின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

அதிக ரன் சேர்த்த வீரர்கள்:

  • விராட் கோலி - 430 ரன்கள்
  • ருதுராஜ் கெய்க்வாட் - 349 ரன்கள்
  • ரிஷப் பண்ட் - 342 ரன்கள்
  • சய் சுதர்ஷன் - 334 ரன்கள்
  • டிராவிஸ் ஹெட் - 325 ரன்கள்

அதிக விக்கெட் எடுத்த வீரர்கள்:

  • ஹர்ஷல் படேல் - 13 விக்கெட்டுகள்
  • ஜஸ்பிரித் பும்ரா - 13 விக்கெட்டுகள்
  • யுஸ்வேந்திர சாஹல் - 13 விக்கெட்டுகள்
  • கோட்ஸி - 12 விக்கெட்டுகள்
  • குல்தீப் யாதவ் - 12 விக்கெட்டுகள்