IPL 2024 Points Table: ஐபிஎல் தொடரில் லக்னோ அணிக்கு எதிரான லீக் போட்டியில் தோல்வியுற்றதால், சென்னை அணி புள்ளிப்பட்டியலில் டாப் 4ல் இருந்து சறுக்கியது. 

ஐபிஎல் புள்ளிப்பட்டியல் விவரம்:

நடப்பாண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி கோலாகளமாக நடைபெற்று வருகிறது, தற்போது வரை  39 போட்டிகள் நடந்து முடிந்துள்ளன. நேற்று நடைபெற்ற  லீக் போட்டியில் சென்னை மற்றும் லக்னோ அணிகள் மோதின. சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் முதலி பேட்டிங் செய்த சென்னை அணி, 4 விக்கெட்டுகளை இழந்து 210 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் ருதுராஜ் 108 ரன்களை விளாசினார். இலக்கை நோக்கி களமிறங்கிய லக்னோ அணியில் மார்கஸ் ஸ்டாய்னிஸ் அதிரடியாக விளாசி, சென்னை அணியை திக்குமுக்காடச் செய்தார். இதன் மூலம், 19.3 ஓவர்களிலேயே லக்னோ அணி இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது. ஸ்டாய்னிஸ் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 124 ரன்களை சேர்த்தார். இந்த தோல்வி மூலம் சென்னை அணி புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களில் இருந்து சரிந்துள்ளது.

எண்அணிபோட்டிகள்வெற்றிதோல்விபுள்ளிகள்
1 ராஜஸ்தான் ராயல்ஸ்81114
 கொல்கத்தா நைட் ரைடர்ஸ்75210
3சன்ரைசர்ஸ் ஐதராபாத்75210
4லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்85310
5சென்னை சூப்பர் கிங்ஸ்8448
6 குஜராத் டைட்டன்ஸ்8448
7மும்பை இந்தியன்ஸ்8356
8டெல்லி கேபிடல்ஸ்8356
9பஞ்சாப் கிங்ஸ்8264
10ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்8172

இன்றைய போட்டி:

இன்று நடைபெறும் தொடரின் 40வது லீக் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ்  மற்றும் சுப்மன் கில் தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் மோத உள்ளன. இதில் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்தில் உள்ள குஜராத் அணி வெற்றி பெற்றால் புள்ளிப்பட்டியலில், 5வது இடம் வரை முன்னேறக்கூடும். 8வது இடத்தில் உள்ள டெல்லி அணி வெற்ற் பெற்றால், புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறக்கூடும்.  நடப்பு தொடரில் ஏற்கனவே இரு அணிகளும் மோதிய போட்டியில், உள்ளூர் மைதானத்தில் குஜராத் அணி தோல்வியை சந்தித்தது. இதற்கு பழிவாங்கும் நோக்கில் அந்த அணி இன்று களம் காண உள்ளது. ஐபில் போட்டிகளின் நேரலையை தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் அலைவரிசையிலும், ஒடிடியில் ஜியோ சினிமா செயலியிலும் ரசிகர்கள் கண்டுகளிக்கலாம்.

அதிக ரன் சேர்த்த வீரர்கள்:

  • விராட் கோலி - 379 ரன்கள்
  • ருதுராஜ் கெய்க்வாட் - 349 ரன்கள்
  • டிராவிஸ் ஹெட் - 324 ரன்கள்
  • ரியான் பராக் - 318 ரன்கள்
  • சஞ்சு சாம்சன் - 314 ரன்கள்

அதிக விக்கெட் எடுத்த வீரர்கள்:

  • ஹர்ஷல் படேல் - 13 விக்கெட்டுகள்
  • ஜஸ்பிரித் பும்ரா - 13 விக்கெட்டுகள்
  • யுஸ்வேந்திர சாஹல் - 13 விக்கெட்டுகள்
  • கோட்ஸி - 12 விக்கெட்டுகள்
  • முஸ்தபிசுர் ரஹ்மான் - 12 விக்கெட்டுகள்