விராட் கோலி நவீன கிரிக்கெட்டில் மிகவும் பிரபலமான நபர்களில் ஒருவ, கோலி தற்போது சர்வதேச அளவில் இந்தியாவிற்காக விளையாடி பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். மேலும், ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடி அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் முதலிடத்திலும் இருக்கிறார்.
தனது உடற்பயிற்சியாலும், ஆக்ரோஷத்தாலும் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி ’கிங்’காக வலம் வருகிறார். கிரிக்கெட்டை தவிர விளம்பரங்களில் தனது நடன திறமையை வெளிப்படுத்தி அசத்தி வருகிறார்.
இந்தநிலையில், விராட் கோலி கண்களை மூடிக்கொண்டு நபரை கண்டுபிடிக்கும் விளையாட்டை விளையாடினார். அந்த வீடியோவில், “தனது பெங்களூர் அணி வீரர்களை அடையாளம் கண்டுகொள்வதற்கு விராட் கோலியின் கண்கள் கட்டப்பட்டு இருந்தது. அப்போது, முதல் தினேஷ் கார்த்திக்கை கண்டு பிடிக்கும்படி விராட் கோலியிடம் கூறப்பட்டது. கோலி தவறுதலாக தினேஷ் கார்த்திக்கை சிராஜ் என்று கூறினார். பின்னர் அவரது தாடியை தொட்டு பார்த்து தினேஷ் கார்த்திக் என அடையாளம் கண்டார். தொடர்ந்து, முகமது சிராஜை அவரது கைக்கடிகாரம் கொண்டும், கேப்டன் ஃபாப் டு பிளெசிஸை அவரது டாட்டூ மற்றும் வலது கையில் உள்ள கடிகாரம் கொண்டு கண்டுபிடித்தார்.
இறுதியாக, இந்திய கால்பந்து அணி கேப்டன் சுனில் சேத்ரி, விராட் கோலி முன்பு நின்றார். அவரிடம் இருந்து கிரிக்கெட் பந்தை பெற்றுக்கொண்ட கோலி, சேத்ரியை தொட்டு பார்த்து ஆளு உயரம் கம்மியாக இருக்கிறார். கடினமான முடிகள் உள்ளது.. ஆனால், யார் என்று தெரியவில்லை என குறிப்பிட்டார். சுனில் சேத்ரியை அடையாளம் காண கடைசியாக ’இவர் ஒரு அதிவேகமாக்ன ஆல்-ரவுண்டர்’ என வழங்கப்பட்டது.
இதைகேட்டதும், சிரித்துகொண்ட விராட் கோலி, அவரை கட்டிப்பிடித்து சுனில் சேத்ரி என்று தெரிவித்தார். தற்போது இந்த வீடியோவை பெங்களூரு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது, இதை பார்த்த கோலி ரசிகர்கள் சமூக வலைதளங்களில் அதிகளவில் ஷேர் செய்து வைரல் செய்து வருகின்றனர்.
ஐபிஎல் 2023 ம் தொடரில் ஆர்சிபி, இதுவரை 6 போட்டிகளில் விளையாடி 3 ல் வெற்றியும், 3 தோல்வியும் சந்தித்துள்ளது. இந்த தொடரில் விராட் கோலி 6 போட்டிகளில் விளையாடி 55.80 சராசரி மற்றும் 142.34 ஸ்டிரைக் ரேட்டில் 4 அரை சதங்கள் உள்பட 279 ரன்கள் அடித்துள்ளார். மேலும், வருகின்ற போட்டிகளில் சிறப்பாக விளையாடி ஆரஞ்சு கேப் மற்றும் ஐபிஎல் கோப்பையை வெல்ல முயற்சிப்பார் என்று தெரிகிறது.
ஐபிஎல் தொடரில் தற்போது ஆரஞ்சு கேப்பை கேப்டன் டு பிளெசிஸ் வைத்திருக்கிறார். இவருக்கு உறுதுணையாக கோலியும் சிறந்த தொடக்கத்தை வெளிப்படுத்தி வருகிறார். இருவரும் தங்கள் அணிக்காக கம்பீர ஆட்டத்தை வெளிபடுத்தினாலும், மிடில் பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்துவீச்சாளர் சொதப்பி வருகின்றனர். வரும் போட்டிகளில் இவர்களும் வலுவாக திரும்பினால், ஆர்சிபி இந்தாண்டு கோப்பையை கட்டாயமாக வெல்லும்.