IPL 2023 Schedule: 2023ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டியின் முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. அதில் ஐபிஎல் போட்டியின் பரம எதிரிகளான சிஎஸ்கே மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையில் முதல் போட்டி வரும் ஏப்ரல் 8-ஆம் தேதி மும்பையில் உள்ள வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளது.  அதேபோல் மே மாதம் 6ஆம் தேதி சென்னையில் உள்ள சிதம்பரம் ஸ்டேடியத்தில் மோதவுள்ளன. இரண்டு அணிகளும் ஐபிஎல் போட்டியின் பரம எதிரிகளாக பார்க்கப்படுகிறார்கள். இந்த இரு அணிகளும் மோதிக்கொள்ளும் ஒவ்வொரு போட்டியும், அதாவது அது லீக் போட்டியோ, கால் இறுதிப் போட்டியோ, அல்லது அரை இறுதிப் போட்டியோ அல்லது இறுதிப் போட்டியோ அது எந்த  போட்டியாக இருந்தாலும், மைதானம் நிரம்பிய ரசிகர்கள் என ஒவ்வொரு போட்டியும் இறுதிப் போட்டி போல் மிகவும் பரபரப்பாக அனல் பறக்க இருக்கும் என்றால் அது மிகையாகாது. 


ஐபிஎல் முழு அட்டவணை


இந்த ஐபிஎல் போட்டியில் முதல் போட்டி குஜரத்தில் உள்ள அஹமதபாத் மைதானத்தில் நடைபெறவுள்ளன. இந்த போட்டியில் நடப்புச் சாம்பியன் குஜராத் அணியும் சிஎஸ்கே அணியும் மோதிக்கொள்கின்றன. மொத்தம் 52 நாட்கள் நடைபெறும் லீக் போட்டிகள் மார்ச் மாதம் 31ஆம் தேதி தொடங்கி, மே மாதம் 21ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதன் பின்னர் கால் இறுதிப் போட்டி அதைத் தொடர்ந்து அரை இறுதிப் போட்டி அதன் பின்னர் இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது.


அதேபோல், லீக் போட்டியின் இறுதிப் போட்டியில் பெங்களூரூ அணியும் குஜராத் அணியும் மோதிக் கொள்ளவுள்ளன. இந்த போட்டியும் குஜராத் மாநிலத்தின் அஹமதபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுளது. இந்த சீசனின் முதல் மற்றும் இறுதிப் போட்டியில் நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. 


அதேபோல். இரண்டாவது போட்டியில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி மொஹாலியில் நடைபெறவுள்ளது. இந்த போட்டி இரு அணிகளுக்கும் இந்த சீசனின் முதல் போட்டிகளாகும். 


இதைத் தொடர்ந்து இந்த சீசனின் மூன்றாவது போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் டெல்லி அணியும் இந்த சீசனில் இரு அணிகளுக்குமான முதல் போட்டியில் மோதவுள்ளன. இந்த போட்டி லக்னோ மைதானத்தில் நடைபெறவுள்ளது. 


2023ஆம் ஆண்டின் ஐபிஎல் சீசனின் நான்காவது போட்டியில் சன் ரைசஸ் ஹைதராபாத் அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதவுள்ளன. இந்த போட்டி ஹைதராபாத்தில் நடைபெறவுள்ளது. 


அதேபோல், அதிக முறை ஐபிஎல் சாம்பியன் பட்டம் வென்ற அணியும் இன்னும் ஒரு முறை கூட சாம்பியன் பட்டம் வெல்லாத அணியுமான அதாவது மும்பை அணியும், பெங்களூரு அணியும் ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி மோதிக் கொள்கின்றன. 


இந்த சீசனில் போட்டிகள் மொத்தம் 12 மைதானங்களில் நடைபெறுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.