CSK IPL 2023 Schedule: 2023ஆம் ஆண்டுக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின்  போட்டி அட்டவணை குறித்து இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.  


கேப்டன் கூல் எனப்படும் தோனியின் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த முறை, மொத்தம் 14 மேட்ச்களில் விளையாடவுள்ளது.  அதேபோல், மொத்தம் நடைபெறும் 70 லீக்  போட்டிகள் நடைபெறவுள்ளது. சிஎஸ்கேவின் 7 போட்டிகள் சென்னையிலும், 7 போட்டிகள் மற்ற மைதானங்களிலும் நடைபெறவுள்ளது. இதில் முதல் போட்டியில் நடப்புச் சாம்பியன் அணியான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மார்ச் மாதம் 31-ஆம் தேதி களமிறங்குகிறது. இந்த போட்டி குஜராத்தில் உள்ள அஹமதாபாத்தில் நடைபெறுகிறது. சென்னையில் முதல் போட்டி, ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட் அணியை சென்னை அணி எதிர்கொள்ளவுள்ளது  குறிப்பிடத்தக்கது.  இந்த போட்டியிலேயே தோனி தனது ஓய்வை அறிவிப்பார் என கூறப்படுகிறது. 


சிஎஸ்கேவின் போட்டி அட்டவணை


 


 CSK vs MI


ஐபிஎல் போட்டியின் பரம எதிரிகளாக அறியப்பட்டுள்ள சென்னை மும்பை அணிகள் இந்த சீசனில் லீக் போட்டியில் மட்டும் இராண்டு முறை மோதிக் கொள்ளவுள்ளன. இதில், முதல் போட்டில் ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. அதன் பின்னர் சென்னையில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் மே மாதம் 6ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த இரு போட்டிகளும் மைதனம் நிறைந்த ரசிகர்கள் இருப்பார்கள் என்பது நிச்சயம்.   


 CSK vs RR 


ராஜஸ்தான் அணியுடன் ஏப்ரல் மாதத்தின் 12ஆம் தேதியும், 27ஆம் தேதியும் மோதிக்கொள்ளவுள்ளன. இதில் முதல் போட்டி சென்னையிலும், இரண்டாவது போட்டி சவாய்மான் சிங் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 


 CSK vs KKR 


கொல்கத்தா அணிக்கு எதிராக சென்னை அணி ஏப்ரல் மாதத்தின் 23ஆம் தேதியும், மே மாதத்தின் 14ஆம் தேதியும் மோதவுள்ளது. இதில் முதல் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டனிலும், இரண்டாவது போட்டி சென்னையிலும் நடைபெறவுள்ளது. 


 CSK vs DC


டெல்லி அணியுடன் சென்னை அணி மே மாதத்தின் 10ஆம் தேதியும், 20ஆம் தேதியும் மோதவுள்ளது. முதல் போட்டி சென்னையிலும், இரண்டாவது போட்டி டெல்லி அருண் ஜெட்லி மைதானத்திலும், நடைபெறவுள்ளது. இந்த போட்டி தான் சென்னை அணியின் லீக் போட்டியில் இறுதிப் போட்டியாகும். 


 CSK vs LSG 


லக்னோ அணிக்கு எதிராக லீக்கில் மட்டும் இரண்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. அதில் முதல் போட்டி சென்னையில் ஏபரல் மாதம் 3ஆம் தேதியும் இரண்டவது போட்டி மே மாதம் 4ஆம் தேதிம் நடைபெற்வுள்ளது. ஏப்ரல் மாதம் 3ஆம் தேதி நடைபெறவுள்ள போட்டி தான் சென்னையில் சிஎஸ்கே அணி களமிறங்கும் முதல் போட்டியாகும். 


CSK vs RCB


பெங்களூரூ அணிக்கு எதிராக சென்னை அணி ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி பெங்களூரு சின்னச்சாமி அணிக்கு எதிராக களமிறங்கவுள்ளது. 


 CSK vs GT 


இந்த சீசனின் முதல் போட்டியில் சென்னையும் குஜராத்தும் மோதுகிறது. இந்த போட்டி மார்ச் மாதம் 31 ஆம் தேதி அஹமதபாத் மைதானத்தில்  நடைபெறவுள்ளது. 


 CSK vs PK


பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக ஏப்ரல் 30ஆம் தேதி சென்னை மைதானத்தில் மோதவுள்ளது. 


 CSK vs SRH 


ஹைதரபாத் அணிக்கு எதிராக சென்னை அணி ஏப்ரல் 21ஆம் தேதி களமிறங்குகிறது. இந்த போட்டி சென்னையில் நடைபெறுகிறது.