இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு எப்போதும் விறுவிறுப்பான கிரிக்கெட் தொடராக இருப்பது ஐ.பி.எல். ஆகும். ஐ.பி.எல். தொடரில் இதுவரை 15 சீசன்கள் நடத்தப்பட்டுள்ளன. 16வது ஐ.பி.எல். சீசன் வரும் மார்ச் 31-ந் தேதி தொடங்கப்பட உள்ளது.


இந்த நிலையில், இதுவரை நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் ஒவ்வொரு அணியும் எத்தனை போட்டிகள் ஆடியுள்ளன என்பதை கீழே விரிவாக காணலாம்.


சென்னை சூப்பர் கிங்ஸ்:


ஐ.பி.எல். கோப்பையை 4 முறை வென்ற சென்னை அணி இதுவரை 2008ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரையில் இதுவரை 209 போட்டிகள் விளையாடியுள்ளது. இதில், சென்னை சூப்பர்கிங்ஸ் அணி 121 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 86 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. 1 போட்டி டையில் முடிந்து தோல்வி அடைந்துள்ளனர். 1 போட்டியில் முடிவில்லை.


டெக்கான் சார்ஜர்ஸ்:


ஐ.பி.எல். கோப்பையை ஒரு முறை கைப்பற்றிய அணியான டெக்கான் சார்ஜர்ஸ் அணி 2008ம் ஆண்டு முதல் 2021ம் ஆண்டு வரை மட்டுமே விளையாடியுள்ளது. இந்த காலகட்டத்தில் 75 போட்டிகளில் ஆடி 29 போட்டிகளில் வெற்றி பெற்று 46 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது.


டெல்லி கேபிடல்ஸ்:


ஐ.பி.எல். தொடரின் முக்கியமான அணிகளில் ஒன்றான டெல்லி கேபிடல்ஸ் அணி 2008ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறது. இவர்கள் இதுவரை 224 போட்டிகளில் ஆடி 100 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். 118 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளனர். 3 போட்டிகள் டையில் முடிந்த பிறகு வெற்றி பெற்றுள்ளனர். 1 போட்டியில் டையில் முடிந்த பிறகு தோல்வி அடைந்துள்ளனர். 2 போட்டிக்கு முடிவு கிடைக்கவில்லை.


குஜராத் லயன்ஸ்:


2016-2017 சீசன்களில் மட்டும் விளையாடிய குஜராத் லயன்ஸ் அணி 30 போட்டிகளில் ஆடி 13 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 16 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. 1 போட்டி டையில் முடிந்து தோல்வி அடைந்துள்ளது.


குஜராத் டைட்டன்ஸ்:


கடந்த சீசனில் அறிமுகமாகி முதல் தொடரிலே கோப்பையை கைப்பற்றி அசத்திய குஜராத் டைட்டன்ஸ் அணி 16 போட்டிகளில் ஆடி 12 வெற்றி, 4 தோல்விகளுடன் உள்ளது.


கொச்சி டஸ்கர்ஸ் கேரளா:


2011ம் ஆண்டு சீசனில் மட்டும் ஆடிய கொச்சி அணி 14 போட்டிகளில் ஆடி 6 போட்டிகளில் வெற்றி பெற்று 8 போட்டிகளில் தோல்வி அடைந்தது.


கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:


ஐ.பி.எல். கோப்பையை 2 முறை கைப்பற்றிய கொல்கத்தா அணி 2008ம் ஆண்டு முதல் ஆடி வருகிறது. இவர்கள் இதுவரை 223 போட்டிகளில் ஆடி 113 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர். 106 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளனர். 1 போட்டி டையில் முடிந்து வெற்றி பெற்றுள்ளனர். 3  போட்டி டையில் முடிந்து தோல்வி அடைந்துள்ளனர்.


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:


கடந்த சீசனில் அறிமுகமாகி சிறப்பாக ஆடிய லக்னோ அணி 15 போட்டிகளில் ஆடி 9 வெற்றி 6 தோல்விகளை பெற்றது.


மும்பை இந்தியன்ஸ்:


ஐ.பி.எல். தொடரை அதிக முறை கைப்பற்றிய பெருமையை கொண்ட மும்பை அணி இதுவரை 2008- 2022 காலகட்டத்தில் 231 போட்டிகளில் ஆடி 129 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 98 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. தலா 2 போட்டிகளில் டையில் முடிந்த பிறகு வெற்றி, தோல்வி அடைந்துள்ளனர்.


புனே வாரியர்ஸ்:


2011-2013 சீசன்களில் ஆடிய புனே வாரியர்ஸ் அணி அணி 46 போட்டிகளில் ஆடி 12 வெற்றி, 33 தோல்விகளை பதிவு செய்துள்ளது. 1 போட்டிக்கு முடிவு கிடைக்கவில்லை.


பஞ்சாப் வாரியர்ஸ்:


ஐ.பி.எல். தொடரின் முக்கியமான அணிகளில் ஒன்றான பஞ்சாப் அணி 2008 -2022 காலகட்டத்தில் 218 போட்டிகளில் ஆடியுள்ளது. 98 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 116 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. 3 போட்டிகளில் டையில் முடிந்த பிறகு வெற்றி பெற்றுள்ளது. 1 போட்டியில் டையில் முடிந்த பிறகு தோல்வி அடைந்தது.


ராஜஸ்தான் ராயல்ஸ்:


ஐ.பி.எல். கோப்பையை முதன்முறையாக கைப்பற்றிய ராஜஸ்தான் அணி 2008-2022ம் ஆண்டு முதல் 192 போட்டிகளில் ஆடியுள்ளது. அதில் 94 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 93 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. 2 போட்டிகளில் டையில் முடிந்த பிறகு வெற்றி பெற்றுள்ளது. 1 போட்டியில் டையில் முடிந்த பிறகு தோல்வி அடைந்துள்ளது. 2போட்டிகளில் முடிவு கிடைக்கவில்லை.


ரைசிங் புனே சூப்பர் ஜெயண்ட்ஸ்:


2016-2017 சீசன்களில் மட்டுமே ஆடிய புனே சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 30 போட்டிகளில் ஆடி 15 வெற்றி, 15 தோல்வியை பதிவு செய்துள்ளது.


ராயல்சேலஞ்சர்ஸ் பெங்களூர்:


ஐ.பி.எல். தொடரில் முக்கியமான அணியான பெங்களூர் அணி இதுவரை 227 போட்டிகளில் ஆடி 107 வெற்றியும், 113 தோல்வியையும் பெற்றுள்ளது. 2 போட்டிகளில் டையில் முடிந்த பிறகு வெற்றி பெற்றுள்ளது. 1 போட்டி டையில் முடிந்து தோல்வி அடைந்துள்ளது, 4 போட்டிகளுக்கு முடிவு கிடையாது.


சன்ரைசர்ஸ் ஹைதரபாத்:


2013ம் ஆண்டு முதல் ஐ.பி.எல். தொடரில் ஆடி வரும் சன்ரைசர்ஸ் அணி 152 போட்டிகளில் ஆடி 74 போட்டிகளில் வெற்றி, 74 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ளது. 1 போட்டி டையில் முடிந்து வெற்றி பெற்றுள்ளது. 3 போட்டிகளில் டையில் முடிந்து தோல்வி அடைந்துள்ளது.