மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக கடந்த இரு தினங்களுக்கு முன்பு, சின்னசாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மோதியது. இந்த போட்டியில் பெங்களூர் 8 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றது. 


5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் பவர் ப்ளேவில் 3 விக்கெட் இழப்பிற்குய் 29 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன் பிறகு களமிறங்கிய இளம் வீரர் திலக் வர்மா 46 பந்துகளில் 84 ரன்கள் குவித்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதன் மூலம் மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 171 ரன்கள் எடுத்தது. அதன்பிறகு களமிறங்கிய பெங்களூர் அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் 172 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. 


ஐ.பி.எல். வரலாற்றில் 5 கோப்பைகளை வென்று வெற்றிகரமான அணியாக திகழும் மும்பை இந்தியன்ஸ் தன்னுடைய முதல் போட்டியில் பெங்களூருவிடம் 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. கடந்த வருடம் வரலாற்றிலேயே முதல் முறையாக 6 தொடர் தோல்விகளை சந்தித்து புள்ளி பட்டியலில் கடைசி இடத்தை பிடித்த மும்பை அணி இந்த வருடம் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. 



இந்த போட்டிற்கு பிறகு ESPNCricinfo நிறுவனத்திற்கு ஆஸ்திரேலிய முன்னாள் வீரரும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் முன்னாள் பயிற்சியாளருமான டாம் மூடி பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “மும்பை இந்தியன்ஸ் அணியை நினைத்து நான் கவலைப்படுகிறேன், மும்பை அணியில் அதிகப்படியான குளறுபடிகள் உள்ளதது. பந்துவீச்சாளர்களிடம் நல்ல திறமை இருப்பதாக நான் கருதவில்லை இந்த ஆண்டு ஐபிஎல் இறுதி போட்டிக்கு மும்பை அணி செல்ல வாய்ப்பே இல்லை. மும்பை அணியில் தரமான உள்ளூர் இந்திய வீரர்கள் மற்றும் நட்சத்திர வெளிநாட்டு வீரர்கள் சமமற்ற இடத்தில் இருக்கிறார்கள். ரீவிஸ், ஸ்டப்ஸ் மற்றும் டேவிட் ஆகியவற்றில் நிறைய பவர்-ஹிட்டர்கள் மற்றும் இளம் பவர்-ஹிட்டர்களைப் பெற்றுள்ளனர்.“ என தெரிவித்தார். 


தொடர்ந்து பேசிய அவர், "கடந்த ஆண்டு மற்றும் இந்த ஆண்டு அவர்கள் தேர்ந்தெடுத்த இளைஞர்களின் எண்ணிக்கையைப் பார்த்தால், இது ஒரு நீண்ட கால திட்டமாகத் தெரிகிறது. ஆனால் அதே நேரத்தில், நீங்கள் நிகழ்காலத்திலும் செயல்பட வேண்டும். ஒரு நல்ல பிரகாசமான எதிர்காலம் உள்ளது. இருப்பினும் நிகழ்காலம் கவலையை அளிக்கிறது” என்று தெரிவித்தார். 


இந்நிலையில் ஏப்ரல் 8 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் தன்னுடைய 2வது போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் எதிர்கொள்ள காத்திருக்கிறது மும்பை இந்தியன்ஸ் அணி.


மும்பை அணி முழு விவரம்:


ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ராமன்தீப் சிங், டெவால்ட் ப்ரீவிஸ், இஷான் கிஷன், ஜஸ்பிரித் பும்ரா, குமார் கார்த்திகேய சிங், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஹிருத்திக் ஷோக்கீன், அர்ஜுன் டெண்டுல்கர், டிம் டேவிட், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அர்ஷத் கான், ஆகாஷ் மத்வால், கேமர் பெஹ்ரன்டோர்ஃப், கிரீன், ஜே ரிச்சர்ட்சன், துவான் ஜான்சன், பியூஷ் சாவ்லா, விஷ்ணு வினோத், ஷம்ஸ் முலானி, ராகவ் கோயல் மற்றும் நேஹல் வதேரா.