இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான முதல் போட்டியிலேயே மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது. முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் இந்த தொடரில் இருந்து விலகினார். 


இதையடுத்து, இவருக்கு பதிலாக இலங்கை அணியின் கேப்டன் தசுன் ஷனகவை குஜராத் அணி தனதாக்கியது. ஷனகா குஜராத் அணியின் கேப்டன் ஹர்தி பாண்டியாவை போல் ஆல்ரவுண்டர். தனது வேகப்பந்து வீச்சால் விக்கெட்களையும் வீழ்த்தியும், தனது அதிரடி பேட்டிங்கால் எதிரணி பந்துவீச்சாளர்களின் பந்துகளை எல்லைக்கோட்டுக்கு பறக்கவிடுவார். 


தசுன் ஷனகா பார்ம்:


இலங்கை அணியின் கேப்டன் மற்றும் ஆல்ரவுண்டராக ஜொலிக்கும் தசுன் ஷனகா, சமீபத்தில் இலங்கை அணிக்காக விளையாடி கடைசி 5 போட்டிகளில் 8 விக்கெட்களை வீழ்த்தியும், 4 இன்னிங்ஸில் 115 ரன்கள் எடுத்துள்ளார். 


ஷனகா இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடு 140 ரன்கள் மற்றும் 13 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். அதேபோல், 50 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 1098 ரன்களும், 17 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார். மேலும், இவர் இதுவரை 86டி20 சர்வதேச போட்டிகளில் விளையாடி 1329 ரன்கள் குவித்து 25 விக்கெட்களையும் வீழ்த்தியுள்ளார். 


50 லட்சம்:


ஐபிஎல் தொடரானது கடந்த மார்ச் 31ம் தேதி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் பிரமாண்டமாக தொடங்கியது. இந்த சீசனின் முதல் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழத்தியது. இந்த போட்டியில் காயம் அடைந்த கேன் வில்லியம்சன் நேற்று தொடரிலிருந்து விலகி தாயகம் திரும்பினார். கடந்த ஏலத்தின்போது குஜராத் அணி, கேன் வில்லியம்சனை 2 கோடிக்கு ரூபாய்க்கு ஏலம் எடுத்தது. 


இந்தநிலையில், குஜராத் அணி தனது அடிப்படை விலையான ரூ.50 லட்சத்துடன் தசுன் ஷனகாவை கேன் வில்லியம்சனுக்கு பதிலாக அணியில் இணைத்தது. தசுன் ஷனகா சமீபத்தில், இந்திய அணிக்கு எதிரான மூன்று டி20 தொடரில்ம் 187 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 124 ரன்கள் எடுத்தார், இதுதவிர ஒருநாள் தொடரில் மூன்று இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தம் 121 ரன்கள் சேர்த்தார். 


புள்ளி பட்டியல்:


ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு எதிராக 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றதன் மூலம் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இவர்களுக்கு அடுத்த இடத்தில் ராஜஸ்தான் அணி ஒரு போட்டியில் விளையாடி ஒரு வெற்றியுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. தொடர்ந்து பெங்களூர் மூன்றாவது இடத்திலும், லக்னோ, பஞ்சாப், சென்னை என முறையே அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. 


குஜராத் டைட்டன்ஸ் அணி முழுவிவரம்: ஹர்திக் பாண்டியா (கேப்டன்), ஷுப்மான் கில், டேவிட் மில்லர், அபினவ் மனோகர், சாய் சுதர்சன், விருத்திமான் சாஹா, மேத்யூ வேட், ரஷித் கான், ராகுல் தெவாடியா, விஜய் சங்கர், முகமது ஷமி, அல்சாரி ஜோசப், யாஷ் தயாள், பிரதீப் சங்வான், தர்ஷன் நல்கண்டே , ஜெயந்த் யாதவ், ஆர். சாய் கிஷோர், நூர் அகமது, தசுன் ஷனகா, ஒடியன் ஸ்மித், கேஎஸ் பாரத், சிவம் மாவி, உர்வில் பட்டேல், ஜோசுவா லிட்டில், மோஹித் ஷர்மா.