IPL 2023 SRH vs RR Playing 11: நடப்பாண்டுக்கான 16வது ஐபிஎல் தொடர்  கடந்த மார்ச் 31 ஆம் தேதி கோலகலமாக தொடங்கியது. இதில் இன்று நடக்கும் 2 ஆட்டங்களில் முதல் ஆட்டத்தில் ஹைதராபாத் - ராஜஸ்தான் அணிகள் மோதுகின்றது. இந்த போட்டியானது ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் டாஸ் வென்ற ஹைதரபாத் அணியின் கேப்டன் புவனேஷ்வர் குமார் பந்து வீச முடிவு செய்துள்ளார். புவனேஷ்வர் குமார் இந்த சீசனில் தான் கேப்டனாக அறிமுகமாகிறார் என்பது குறிப்பிடத்தாக்கது.


கிட்டத்தட்ட நான்கு வருட இடைவெளிக்குப் பிறகு ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் போட்டியானது நடைபெறுகிறது. சொந்த மண்ணில் ஹைதராபாத் அணி அசைக்க முடியாத அளவுக்கு அபார சாதனை படைத்துள்ளது. அந்த அணி இங்கு விளையாடிய 44 போட்டிகளில் 29 போட்டிகளில் வெற்றியும், 14 போட்டிகளில் தோல்வியும் கண்டுள்ளது. அதேமயம் ராஜஸ்தான் அணி இந்த மைதானத்தில் விளையாடிய ஆறு போட்டிகளில் இரண்டில் வெற்றியும், நான்கில் தோல்வியும் அடைந்துள்ளது. 


சன்ரைசஸ் ஹைதரபாத் அணியில் இன்று களமிறங்கும் வீரர்கள்: 


 மயங்க் அகர்வால், அபிஷேக் ஷர்மா, ராகுல் திரிபாதி, ஹாரி புரூக், வாஷிங்டன் சுந்தர், கிளென் பிலிப்ஸ்(விக்கெட் கீப்பர்), உம்ரான் மாலிக், அடில் ரஷித், புவனேஷ்வர் குமார்(கேப்டன்), டி நடராஜன், ஃபசல்ஹாக் ஃபரூக்கி


சன்ரைசஸ் ஹைதரபாத அணியின் இம்பேக்ட் ப்ளேயர்கள் விபரம்


அப்துல் சமத், மயங்க் டாகர், உபேந்திர யாதவ், மயங்க் மார்கண்டே, விவ்ராந்த் சர்மா


ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள்:


யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன்(கீப்பர் மற்றும் கேப்டன்), தேவ்தத் படிக்கல், ரியான் பராக், ஷிம்ரோன் ஹெட்மியர், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், டிரென்ட் போல்ட், கேஎம் ஆசிப், யுஸ்வேந்திர சாஹல்


ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இம்பேக்ட் ப்ளேயர்கள்: 


சந்தீப் சர்மா, டொனாவன் ஃபெரீரா, துருவ் ஜூரல், நவ்தீப் சைனி, முருகன் அஸ்வின்