ஐபிஎல் தொடரில் இன்று நடக்கும் 14வது ஆட்டத்தில் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றது.


 கடந்த மார்ச் 31 ஆம் தேதி  16வது ஐபிஎல் சீசன் ரசிகர்களின் பெரும் வரவேற்புக்கு மத்தியில் குஜராத் மாநிலம் அஹமதாபாத் மோடி மைதானத்தில் கோலாகலமாக தொடங்கியது. இந்த சீசனிலும் சென்னை, டெல்லி, மும்பை, குஜராத், லக்னோ, பஞ்சாப், ராஜஸ்தான்,பெங்களூரு, ஹைதராபாத், கொல்கத்தா ஆகிய 10 அணிகள் பங்கேற்று விளையாடி வருகிறது.  இதுவரை 12 போட்டிகள் நடந்துள்ளது. இதில் எல்லா அணிகளும் ஏறக்குறைய 2 போட்டிகளில் விளையாடி விட்டது. 


இதனிடையே இன்று நடக்கும் ஆட்டத்தில் எய்டன் மார்க்ரம் தலைமையிலான சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும், ஷிகர் தவான் தலைமையிலான பஞ்சாப் அணியும் மோதுகிறது. இப்போட்டி ஹைதராபாத் அணியின் உள்ளூர் மைதானமான ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. 


இந்த சீசனில் வெற்றி, தோல்வி:  


நடப்பு சீசனை பொறுத்தவரை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 2 போட்டிகளில் விளையாடி இரண்டிலும் தோல்வியடைந்தது. அதேசமயம் பஞ்சாப் அணி முதல் ஆட்டத்தில் டக் வொர்த் லூயிஸ் முறைப்படி 7 ரன்கள் வித்தியாசத்திலும், 2வது இடத்தில் 5  ரன்கள் வித்தியாசத்திலும் வென்றது. எனவே ஹாட்ரிக் வெற்றிக்காக பஞ்சாப் அணியும் , முதல் வெற்றிக்காக ஹைதராபாத் அணியும் முயலும் என்பதால் இப்போட்டி அனல் பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுவரை நேருக்கு- நேர்: 


பஞ்சாப் - குஜராத் அணிகள் இதுவரை 20 போட்டிகளில் விளையாடியுள்ள நிலையில், இதில் 13 ஆட்டங்களில் ஹைதராபாத் அணியே வெற்றி பெற்றுள்ளது. பஞ்சாப் அணி 7 போட்டிகளில் மட்டுமே வென்றுள்ளது. அதிகப்பட்சமாக ஹைதராபாத் அணி 212 ரன்களும், குறைந்த பட்சமாக 114 ரன்களையும் பஞ்சாப் அணிக்கு எதிராக பதிவு செய்துள்ளது. பஞ்சாப் அணி 211 ரன்களை அதிகப்பட்சமாகவும், குறைந்தப்பட்சமாக 119 ரன்களையும் பதிவு செய்துள்ளது. கடந்தாண்டு நடந்த இரு போட்டிகளிலும் இரு அணிகளிலும் தலா ஒரு வெற்றியை பெற்றுள்ளது. 


அணியில் இடம் பெறும் வீரர்கள் விவரம் (உத்தேச பட்டியல்) 


ஹைதராபாத் அணி: மயங்க் அகர்வால், அன்மோல்பிரீத் சிங், ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம் (கேப்டன்) , ஹாரி புரூக், வாஷிங்டன் சுந்தர், அப்துல் சமத், புவனேஷ்வர் குமார், டி நடராஜன், உம்ரான் மாலிக், அடில் ரஷித்


பஞ்சாப் அணி: ஷிகர் தவான் (கேப்டன்), பிரப்சிம்ரன் சிங், பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா, ஷாருக் கான், சாம் குர்ரான், சிக்கந்தர் ராசா, நாதன் எல்லிஸ், ஹர்பிரீத் பிரார், ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்


மேலும் படிக்க: IPL 2023 GT vs KKR : கடந்த சீசனில் தோல்வி.. குஜராத் அணியை வெல்லும் முடிவில் கொல்கத்தா அணி.. முயற்சி பலிக்குமா?