IPL 2023: ஐபிஎல் தொடரில் நேற்று (மே, 14) நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதிக்கொண்டன. இந்த போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்த பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 171 ரன்கள் சேர்த்தது.


அதன் பின்னர் களமிறங்கிய ராஜஸ்தான் அணி பெங்களூரு அணியின் சிறப்பான பந்து வீச்சினால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ராஜஸ்தான் அணி மிகவும் மோசமான நிலைக்கு ஆளானது. 10.3 ஓவர்களில் ராஜஸ்தான் அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 59 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் பெங்களூரு அணி 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 


இந்த போட்டிக்குப் பின்னர் பெங்களூரு அணியின் டிரஸ்ஸிங் ரூமில் பெங்களூரு அணியின் முன்னாள் கேப்டனும் தற்போதைய நட்சத்திர பேட்ஸ்மேனுமான விராட் கோலி ஜாலியாக பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. பெங்களூரு அணி வீரர்கள் ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டில் வெற்றி பெற்றது குறித்து கேட்டபோது, ஒவ்வொருவரும் தங்களது கருத்தினை தெரிவித்து வந்தனர். அப்போது விராட் கோலி, நான் மட்டும் பந்து வீச்சியிருந்தால் ராஜஸ்தான் அணியை 40 ரன்னில் சுருட்டியிருப்பேன் என கூறியுள்ளார். இந்த வீடியோவை பெங்களூர் அணி நிர்வாகம் தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 






நியாபகம் இருக்கா விராட்?


அதிரடி பேட்ஸ்மேனான விராட் கோலி பந்து வீச்சில் அதற்கு அப்படியே நேர்மாறானவர். 2012ஆம் ஆண்டு பெங்களூருக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற சென்னை சூப்பர் கிங்ஸ்க்கு கடைசி 2 ஓவர்களில் 43 ரன்கள் தேவைப்பட்டது.  இந்நிலையில் போட்டியின் 19 ஓவரை விராட் கோலியை வீசச் சொன்னார் அன்றைய பெங்களூரு அணி கேப்டன் டேனியல் வெட்டோரி. விராட் கோலி வீசிய 19வது ஓவரை எதிர்கொண்ட அல்பி மோர்கல் அந்த ஓவரில் ஓவரில் 3 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் விரட்டியதுடன் மொத்தம்  28 ரன்கள் எடுத்தார். வினய் குமார் வீசிய கடைசி ஓவரில் 15 ரன்கள் எடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அந்த போட்டியில்  வெற்றி பெற்றது. 


இந்த போட்டியில் சென்னை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமே விராட்கோலி பந்து வீசியது தான் என இன்றுவரை சென்னை அணியின் ரசிகர்கள் அவ்வப்போது சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். அதேபோல், 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் போட்டியில் விளையாடி வரும் விராட் கோலி இதுவரை 41.5 ஓவர்கள் பந்து வீசி 368 ரன்கள் விட்டுக்கொடுத்ததுடன் 4 விக்கெட்டுகள் கைப்பற்றியுள்ளார். இவரது சிறந்த பந்து வீச்சு என்பது 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகள் கைப்பற்றியது தான். 




மேலும் படிக்க, 


Watch: நடுவர்களுடன் சண்டைக்கு சென்ற நிதிஷ் ராணா… அபராதம் விதிப்பு: ஏன் தெரியுமா? - வீடியோ வைரல்