சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இன்று இரவு நேருக்கு நேர் மோத இருக்கின்றன. இந்த போட்டியானது ராஜஸ்தான் ராயல்ஸின் சொந்த மைதானமான ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் நடைபெறுகிறது.


பிட்ச் எப்படி..?


ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் பேட்டிங் செய்வது அவ்வளவு எளிதான விஷயம் இல்லை. இந்த மைதானத்தில் சிக்ஸர் அடிப்பது மிகவும் கடினம். மற்ற ஐபிஎல் போட்டிகள் நடைபெறும் மைதானங்களை ஒப்பிடுகையில், இங்கு குறைவாகவே சிக்ஸர்கள் பதிவாகியுள்ளது. அதாவது சராசரியாக, இந்த மைதானத்தில் 29 பந்துகளுக்கு ஒருமுறையே சிக்ஸர்கள் அடிக்கப்படுகிறது. 


இந்த மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். எனவே, இரு அணிகளும் தலா மூன்று ஸ்பின்னர்களுடன் களமிறங்கலாம். இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அஷ்வின் மற்றும் சாஹலுடன் ஆடம் ஜம்பாவும் களம் காணலாம். அதேபோல், தீக்‌ஷனா மற்றும் ஜடேஜாவுடன் மிட்செல் சான்ட்னர் சென்னை சூப்பர் கிங்ஸில் விளையாட அதிக வாய்ப்புள்ளது. 


ராஜஸ்தானும், இந்த மைதானமும்...!


ஐபிஎல் 2023 தொடரில் இதுவரை ஒரே ஒரு போட்டி மட்டுமே இந்த மைதானத்தில் நடந்துள்ளது. இந்த போட்டியின் பிட்ச் சற்று மெதுவாகவே இருக்கும். கடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 154 ரன்கள் எடுத்தது. அதற்கு பிறகு, களமிறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 144 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை சந்தித்தது. இன்றைய போட்டியிலும் இதுமாதிரியான போட்டியே எதிர்பார்க்கப்படுகிறது. 


ராஜஸ்தான் ராயல்ஸ் இந்த மைதானத்தில் இதுவரை 48 போட்டிகளில் விளையாடி 32ல் வெற்றி பெற்றுள்ளது. இவர்களில் வெற்றி சதவீதம் 66 ஆக உள்ளது. 


சென்னை சூப்பர் கிங்ஸ்:


சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த சீசனில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இதுவரை 7 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே 5 வெற்றி, 2 தோல்வியுடன் விளையாடி வருகிறது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை 7 போட்டிகளில் 4 வெற்றிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. கடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிபெற்றது குறிப்பிடத்தக்கது. 


இரு அணிகள் விவரம்: 


ராஜஸ்தான் ராயல்ஸ்: 


ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ஆர் அஷ்வின், சந்தீப் சர்மா, ஆடம் ஜம்பா, டிரென்ட் போல்ட் மற்றும் யுஸ்வேந்திர சாஹல். 


சென்னை சூப்பர் கிங்ஸ்:


ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, ஷிவம் துபே, மொயீன் அலி, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன்/விக்கெட் கீப்பர்), துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா, மதீஷா பத்திரனா மற்றும் ஆகாஷ் சிங்