ஐபிஎல் தொடரின் 27வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் இன்று மோதி வருகின்றன. இந்த போட்டியானது மொஹாலியில் உள்ள பஞ்சாப் கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் மதியம் 3. 30 மணிக்கு தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது.
பஞ்சாப் அணியின் கேப்டன் ஷிகர் தவானும், பெங்களூரு அணி கேப்டன் ஃபாப் டு பிளிசியும் காயம் காரணமாக இந்த போட்டியில் விளையாடவில்லை. இவர்களுக்கு பதிலாக பஞ்சாப் அணிக்கு சாம் கரன் மற்றும் பெங்களூரு அணிக்கு விராட் கோலியும் தலைமை தாங்கி வருகின்றன.
முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் சாம் கரன் பந்து வீச்சை தேர்வு செய்தனர். அதன் அடிப்படையில் பெங்களூரு அணியின் தொடக்க வீரர்களாக ஃபாப் டு பிளிசியும் (இம்பாட் வீரர்), விராட் கோலியும் அரைசதம் அடித்து அசத்தினர். அதன் அடிப்படையில், பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் குவித்தது. பெங்களூரு அணியில் அதிகபட்சமாக ஃபாப் டு பிளிசி 84 ரன்களும், விராட் கோலி 59 ரன்களும் எடுத்திருந்தனர்.
பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ஹர்ப்ரீத் சிங் 2 விக்கெட்களும், அர்ஷ்தீப் மற்றும் கேப்டன் சாம் கரன் தலா ஒரு விக்கெட்களை கைப்பற்றி இருந்தனர்.
175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக அதர்வா மற்றும் பிரப்சிம்ரன் சிங் களமிறங்கினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதர்வா 2 பந்துகளில் 4 பந்துகள் எடுத்து சிராஜ் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேற, அடுத்து வந்த மேத்யூ மற்றும் லிவிங்ஸ்டன் ஒற்றை இலக்குடன் வெளியேறினார்,
மறுமுறையில் நிலைத்து நின்ற பிரப்சிம்ரன் சிங் 30 பந்துகளில் 46 ரன்கள் அடித்து பர்னெல் வீசிய 12வது ஓவரில் அவுட்டாகி அரைசதத்தை தவறவிட்டார். பின்னால் வந்த ஹர்ப்ரீத் பாட்டியா மற்றும் சாம் கரன் முறையே 10 மற்றும் 13 ரன்களில் வெளியேற, தமிழக வீரர் ஷாரூக் கானும் 5 பந்துகளில் ஒரு சிக்ஸர் உள்பட 7 ரன்கள் அடித்து ஹசரங்கா பந்து வீச்சில் தினேஷ் கார்த்திக்கிடம் ஸ்டம்பிங் ஆனார். உள்ளே வந்த விக்கெட் கீப்பர் ஜிதேஷ் சர்மா தன் பங்கிற்கு 2 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் அடித்து தனி ஆளாக போராடி கொண்டு இருந்தார்.
16 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 7 விக்கெட்டுக்கு 138 ரன்கள் எடுத்திருந்தார். இதன்மூலம் பஞ்சாப் அணிக்கு 24 பந்துகளில் 37 ரன்கள் தேவையாக இருக்க, 17வது ஓவர் வீசிய சிராஜ் ஹர்ப்ரீத் ப்ராரை 13 ரன்களில் க்ளீன் போல்ட் செய்தார். அதே ஓவரில் நாதன் எல்லீஸும் போல்டானார்.
கடைசி 12 பந்துகளில் 25 ரன்கள் தேவை என்ற நிலையில் அதிரடியாக விளையாடிய ஜிதேஷ் சர்மா 41 ரன்களில் ஹர்ஷல் பட்டேல் பந்தில் அவுட்டாக, 150 ரன்களுக்குள் பஞ்சாப் அணி அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
இதன்மூலம் பஞ்சாப் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.