ஐபிஎல் தொடரின் 27வது லீக் போட்டில் பஞ்சாப் கிங்ஸ் அணியும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் இன்று மோதியது. இந்த போட்டியானது மொஹாலியில் உள்ள ஐஎஸ் பிந்த்ரா ஸ்டேடியத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கியது.
இரு அணிகளுக்கும் மோதிய இந்த போட்டியில் ஸ்டாண்ட்-இன் கேப்டன்களாக சாம் குர்ரான் மற்றும் விராட் கோலி ஆகியோர் முறையே பஞ்சாப் மற்றும் பெங்களூர் அணியை வழிநடத்துகின்றனர். இருந்தனர். ஷிகர் தவான் மற்றும் ஃபாஃப் டு பிளெசிஸ் காயம் காரணமாக விளையாடவில்லை. ஆனால், இம்பாக்ட் பிளேயராக களமிறங்கிய டு பிளெசிஸ் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
விலா எலும்பில் ஏற்பட்ட காயம் காரணமாக இம்பாக்ட் பிளேயராக டு பிளெசிஸ், விராட் கோலி பெங்களூர் அணியின் தொடக்க வீரராக களமிறங்கினார். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 137 ரன்கள் குவித்தது. தொடர்ந்து ஆர்சிபியின் பின் வரிசை வீரர்கள் சொதப்பியதால் ஆர்சிபி அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 174 ரன்கள் எடுத்தது.
அடுத்ததாக களமிறங்கிய பஞ்சாப் அணி 18. 2 ஓவர்களில் 150 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை சந்தித்தது. இதன்மூலம் பெங்களூர் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
பஞ்சாப் அணியில் அதிகபட்சமாக ப்ரப்சிம்ரன் 46 ரன்களும், ஜிதேஷ் சர்மா 41 ரன்களும் எடுத்திருந்தனர்.
ஆரஞ்சு கேப்:
பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 84 ரன்கள் எடுத்ததன் மூலம் பாப் டு பிளெசிஸ், ஐபிஎல் தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர் பட்டியலில் தற்போது முதலிடத்தில் இருக்கிறார். இவர், இப்போது ஆறு போட்டிகளில் 166.50 ஸ்ட்ரைக் ரேட்டில் 343 ரன்கள் எடுத்துள்ளார்.
டு பிளெசிஸ் 6 போட்டிகளில் விளையாடி 343 ரன்களுடன் முதலிடத்திலும்,விராட் கோலி 279 ரன்களுடன் இரண்டாவது இடத்திலும் இருக்கிறார். இவருக்கு அடுத்த இடத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜாஸ் பட்லர் 244 ரன்களுடனும், வெங்கடேஷ் ஐயர் 234 ரன்களுடன் மூன்று மற்றும் 4வது இடத்தில் இருக்கின்றனர்.
5. ஷிகர் தவான் - 233
6. சுப்மன் கில் - 228
7. டேவிட் வார்னர்-228
8. கைல் மேயர்ஸ்- 219
9. திலக் வர்மா- 214
10. ருதுராக் கெய்க்வாட் - 200
ரன்கள் எடுத்து முதல் 10 இடங்களில் உள்ளனர்.
பர்பிள் கேப்:
பஞ்சாப் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் முகமது சிராஜ் 21 ரன்களை மட்டுமே விட்டுகொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். இது ஐபிஎல் தொடரில் இவரது சிறந்த பந்துவீச்சாகவும் அமைந்தது. இதன்மூலம் ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் எடுத்தவர்கள் பட்டியலில் 12 விக்கெட்களுடன் சிராஜ் பர்பிள் கேப்பை தன்வசமாக்கினார்.
லக்னோ அணியை சேர்ந்த மார்க் வுட் 4 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்களுடன் 2 வது இடத்திலும், யுஸ்வேந்திர சாஹல் 6 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்களுடன் மூன்றாவது இடத்தில் இருக்கிறார். ரஷித் கான் 5 போட்டிகளில் விளையாடி 11 விக்கெட்கள் வீழ்த்தி 4வது இடத்தில் இருக்கிறார்.
5. முகமது ஷமி - 10
6. துஷார் பாண்டே - 10
7. அர்ஷ்தீப் சிங் - 9
8. ரவிசந்திரன் அஸ்வின் - 8
9. ரவி பிஸ்னோய் - 8
10. பியூஸ் சாவ்லா - 7
ஆகியோர் அதிக விக்கெட்களை எடுத்து முதல் 10 இடங்களில் உள்ளனர்.