ஐபிஎல் வரலாற்றில் இதுவரை முதல் போட்டிகளில் டாஸ் வென்ற அணிகளுக்கு, போட்டியின் முடிவில் கிடைத்தது வெற்றியா, தோல்வியா என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.
16வது ஐபிஎல் சீசன்:
16வது ஐபிஎல் சீசனின் முதல் போட்டியில் குஜராத் மற்றும் சென்னை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி கேப்டன் பாண்ட்யா, பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்நிலையில், கடந்த 15 சீசனின் முதல் போட்டியில் டாஸ் வென்ற அணிகளுக்கு கிடைத்தது வெற்றியா, தோல்வியா என்பது இந்த தொகுப்பில் அறியலாம்.
முதல் சீசன்: கொல்கத்தா வெற்றி
ஐபிஎல் அறிமுக தொடரின் முதல் போட்டியில் பெங்களூரு மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பேட்டிகை தேர்வு செய்தது. ஆனால், கொல்கத்தா நிர்ணயித்த 223 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்ட முடியாமல் 140 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி தோல்வியை தழுவியது.
2வது சீசன்: மும்பை வெற்றி
இரண்டாவது சீசனின் முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆனால், மும்பை அணி நிர்ணயித்த 166 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் சென்னை அணி தோல்வியது.
3வது சீசன்: கொல்கத்தா வெற்றி
மூன்றாவது சீசனின் முதல் போட்டியில் கொல்கத்தா மற்றும் டெக்கான் சார்ஜர்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெக்கான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆனால், கொல்கத்தா அணி நிர்னயித்த 162 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல் டெக்கான் அணி தோல்வியை தழுவியது.
4வது சீசன்: சென்னை வெற்றி
நான்கவது சீசனின் முதல் போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த சென்னை அணி, 153 ரன்களை அடித்தது. ஆனால், கொல்கத்தா அணி 151 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
5வது சீசன்: மும்பை வெற்றி
டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி, வெறும் 112 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதனால் மும்பை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்றது.
6வது சீசன்: கொல்கத்தா அணி வெற்றி
டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய டெல்லி 128 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இறுதியில், கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
7வது சீசன்: கொல்கத்தா வெற்றி
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடர்ந்து அந்த அணி நிர்ணயித்த 164 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல், மும்பை அணி தோல்வியை தழுவியது.
8வது சீசன்: கொல்கத்தா வெற்றி
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை 168 ரன்களை சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
9வது சீசன்: புனே வெற்றி
புனே அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடர்ந்து அந்த அணி வெறும் 121 ரன்களை மட்டுமே சேர்க்க, புனே அணி எளிதில் வெற்றி பெற்றது.
10வது சீசன்: ஐதராபாத் வெற்றி
ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய ஐதராபாத் அணி நிர்ணயித்த 207 ரன்கள் என்ற இலக்கை எட்ட முடியாமல், பெங்களூரு அணி 35 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
11வது சீசன்: சென்னை வெற்றி
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை 165 ரன்களை சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
12வது சீசன்: சென்னை அணி வெற்றி
பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு 70 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
13வது சீசன்: சென்னை அணி வெற்றி
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி 162 ரன்களை சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
14வது சீசன்: பெங்களூரு வெற்றி
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பெங்களூரு அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய மும்பை அணி 159 ரன்களை சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய பெங்களூரு அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
15வது சீசன்: கொல்கத்தா வெற்றி
சென்னை அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 131 ரன்களை சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.