ஆப்கானிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர் நவீன் - உல்- ஹக், விராட் கோலியுடன் சண்டையிடுவதை இன்னும் நிறுத்தவில்லை. மும்பை மற்றும் பெங்களூர் இடையே நேற்று நடந்த போட்டியின்போது நவீன் உல் ஹக் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 2 போஸ்ட்களை பகிர்ந்துள்ளார். அதில், விராட் கோலி ஆட்டமிழந்த பிறகு ஒரு போஸ்டையும், பெங்களூரு தோல்வியடைந்த பிறகு மற்றொன்றையும் பகிர்ந்தார். நவீனின் இந்த இரண்டு போஸ்ட்களும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலானது. 


கடந்த மே 1ம் தேதி லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் இடையிலான போட்டியின்போது நவீன் - உல் -ஹக் மற்றும் விராட் கோலி ஆகியோர் களத்தில் கடுமையான வாக்குவாதத்தை கண்டனர். இந்த சண்டை நடந்து 1 வாரத்திற்கு மேலாகியும் இரு வீரர்களும் தங்களது சமூக வலைதளங்களில் போஸ்ட் போட்டு சண்டை போட்டு வருகின்றனர். 






ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தோல்வியடைந்த பிறகு, நவீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கொண்ட போஸ்ட்டின் தலைப்பில் ’ஸ்வீட் மாம்பழங்கள்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் நவீன், முன்னதாக  குஜராத் மற்றும் லக்னோ இடையே நடந்த போட்டியில் குஜராத்தின் வெற்றி குறித்து இன்ஸ்டா ஸ்டோரி ஒன்றையும் போஸ்ட் செய்தார். அதில், விருத்திமான் சாஹாவின் சிறப்பான இன்னிங்ஸ் மற்றும் ரஷித் கானின் அபாரமான கேட்ச்சை பாராட்டினார்.






என்னதான் பிரச்சினை:


ஐபிஎல் தொடரின் 43வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதியது.இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 126 ரன்கள் மட்டுமே எடுத்தது. 


அடுத்து களமிறங்கிய லக்னோ அணி 127 ரன்களை நோக்கி பேட்டிங் செய்தபோது விக்கெட்கள் சரிந்தது. அப்போது 10வது இடத்தில் நவீன் உல் ஹக் பேட்டிங் செய்து கொண்டிருந்தார். விரைவில் விக்கெட்களை எடுக்க விராட் கோலி, நவீனிடம் ஏதோ ஸ்லட்ஜிங் செய்தாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த நவீன் விராட் கோலியிடம் சண்டைக்கு சென்றுள்ளார். அந்த நேரத்தில் நடுவர்கள் இருவரை தடுக்க, விராட் கோலி அவரது கால்களை காமித்து நவீனை ஏதோ சொல்லிருக்கிறார். இன்னும் நவீன் டென்ஷாகியுள்ளார். 


போட்டிக்கு பிறகு விராட் கோலி, நவீனிடம் சொன்ன வார்த்தை இதுதான் என்று நவீன் உல் ஹக் போஸ்ட் செய்ததாக ஒரு பதிவு வைரலானது. அதில் , “ அறிவுரைகளை ஏற்கவும் மரியாதை கொடுக்கவும் எப்போதும் நான் தயார். கிரிக்கெட் ஒரு ஜென்டில்மேன் விளையாட்டு. ஆனால் நீங்கள் அனைவரும் எங்கள் காலடியில் இருக்கிறீர்கள் என்று யாராவது சொன்னால் அவர் என்னைப் பற்றி மட்டும் பேசவில்லை, என் மக்களை பற்றி பேசுகிறார் என்று அர்த்தம்” என குறிப்பிட்டிருந்தார். ஆனால் இது சித்தரிக்கப்பட்டவை என்று கூறப்படுகிறது. 


பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதிபெறுமா பெங்களூரு? 


மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான 6 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு பிளேஆஃப் சுற்றுக்கு செல்வது சற்று கடினமாக உள்ளது. RCB இதுவரை 11 போட்டிகளில் 5ல் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. பெங்களூரு இப்போது மீதமுள்ள மூன்று போட்டிகளிலும் வெற்றி பெறுவதுடன் மற்ற போட்டிகளின் முடிவுகளையும் பொறுத்து பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெறுமா என்பது தெரியும்.