ஐ.பி.எல். தொடரில் நேற்று ஹைதரபாத் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணிகள் நேருக்கு நேர் மோதின. இந்த போட்டியில் மும்பை அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


மும்பையின் பந்துவீச்சு:


ஐ.பி.எல். தொடரில் வீரர்கள் மீண்டும் ஏலத்தில் விடப்பட்டு, புதிய மும்பை இந்தியன்ஸ் அணியாக கடந்த சீசனில் மிக மோசமான தோல்வியை தழுவியது. நடப்பு தொடரிலும் முதல் 2 போட்டியை தோல்வியுடன் தொடங்கிய மும்பை இந்தியன்ஸ் அணியை கண்டு ‘மும்பையின் கதை இனி கதம்.. கதம்..’ என்று விமர்சிக்கத் தொடங்கினர்.


ஆனால், அசராமல் கம்பேக் கொடுத்த மும்பை இந்தியன்ஸ் அணி நேற்றைய போட்டியில் வெற்றி பெற்று ஹாட்ரிக் வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மும்பையின் பந்துவீச்சின் பலமாக ட்ரெண்ட் போல்ட், பொல்லார்ட், ஹர்திக் பாண்ட்யா, ராகுல் சாஹர், குருணால் பாண்ட்யா என்று ஒரு பட்டாளமே இருந்தது. ஆனால், இவர்களில் யாருமே இப்போது மும்பை இந்தியன்ஸ் அணியில் இல்லை.


புதிய பட்டாளம்:


ஆனால், இப்போது மும்பை இந்தியன்ஸ் அணியின் பந்துவீச்சு பலம் பொருந்திய படையாக இளைஞர்கள் பட்டாளம் உருமாறியுள்ளது. ஜேசன் பெஹ்ரெண்ட்ரூப், ஹிரித்திக் ஷொகீன், பியூஷ் சாவ்லா, அர்ஷத்கான், மெரிடித், கேமரூன் கிரீன், அர்ஜூன் டெண்டுல்கர் ஆகியோர் உள்ளனர். இவர்களில் பியூஷ் சாவ்லா மட்டுமே அனுபவமிகுந்தவர். மற்ற அனைவரும் இளையவர்கள் ஆவார்கள்.


அதேசமயத்தில் இவர்களில் கேமரூன் கிரீன் மற்றும் மெரிடித் தவிர அனைவரும் லட்சங்களில்தான் மும்பை அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டவர். கிரீன் ரூபாய் 17.50 கோடிக்கு மும்பை அணிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டவர். மற்ற வீரர்கள் எடுக்கப்பட்ட தொகை விவரத்தை கீழே காணலாம்.



  • அர்ஜூன் டெண்டுல்கர் – 30 லட்சம்

  • ஹிரித்திக் ஷோகின் – 20 லட்சம்

  • பியூஷ் சாவ்லா – 50 லட்சம்

  • அர்ஷத் கான் – 20 லட்சம்

  • மெரிடித் – 1.5 கோடி


கேமரூன் கிரீன் மற்றும் மெரிடித் கோடிகளில் எடுக்கப்பட்டாலும் கடந்த கால மும்பை இந்தியன்ஸ் வேகப்பந்துவீச்சாளர்களுடன் ஒப்பிடும்போது சர்வதேச அளவிலும், ஐ.பி.எல். தொடரிலும் மிக குறைந்த அனுபவமே கொண்டவர்கள். ஆனாலும், லட்சங்களில் எடுக்கப்பட்ட இந்த அபாரமான வீரர்களை கொண்டு கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களை வென்றுள்ளனர். இந்த புதிய பந்துவீச்சாளர்கள் பட்டாளம் மும்பை இந்தியன்ஸ் அணியின் பலமாக மாறியுள்ளது.  இனி வரும் போட்டிகளிலும் எதிரணிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி பந்துவீச்சு படை பலத்த தாக்குதலை நடத்தும் என்று எதிர்பார்க்கலாம்.


மேலும் படிக்க: RR vs LSG IPL 2023: வலுவான ராஜஸ்தானை வீழ்த்துமா லக்னோ..? சாம்சன் - கே.எல்.ராகுல் படைகளில் பலம், பலவீனம் என்ன?


மேலும் படிக்க: Rohit Sharma in IPL: 6 ஆயிரம் ரன்களை எட்டிய ஹிட்-மேன் ரோகித் சர்மா - ஐபிஎல் ரவுண்ட் - அப் இதோ..!