Rohit Sharma in IPL: ஐபிஎல் தொடர் தொடங்கப்பட்ட வருடமான 2008ஆம் ஆண்டு முதல் ஆடி வருபவர் ரோகித சர்மா. தொடகக்த்தில் டெக்கான் சார்ஜஸ் அணியில் வீரராக இருந்த அவரை மும்பை அணி ஏலத்தில் எடுத்தது.  2013ஆம் ஆண்டில் இருந்து மும்பை அணியை வழிநடத்தி வரும் ரோகித் சர்மா இன்று (ஏப்ரல் 18) சன்ரைசஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போது தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரரான வாஷிங்டன் சுந்தர் வீசிய போட்டியின் மூன்றாவது ஓவரின் முதல் மூன்று பந்துகளையும் பவுண்டரிகளை விளாசினார். அதில் இரண்டாவது பவுண்டரியை ரோகித் சர்மா அடிக்கும் போது, ஐபிஎல் போட்டித் தொடரில் தனது 6 ஆயிரம் ரன்களை எட்டினார். எப்போது சிக்ஸர்களை விளாசுவதில் கவனம் செலுத்தும் ரோகித் சர்மா இந்த போட்டியில் பவுண்டரிகள் மீது அதிக கவனம் செலுத்தினார். இந்த போட்டியில் மொத்தம் 18 பந்துகளை எதிர்கொண்ட இவர் 28 ரன்கள் எடுத்து தமிழ்நாட்டைச் சேர்ந்த நடராஜன் பந்து வீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். 


16 ஐபிஎல் சீசன்களிலும் விளையாடியுள்ள ரோகித் சர்மா 6 ஆயிரம் ரன்களை எட்டிய நான்காவது வீரர் ஆவார். இவருக்கு முன் விராட் கோலி, ஷிகர் தவான், டேவிட் வார்னர் 6 ஆயிரம் ரன்களை எட்டியுள்ளனர். ரோகித் சர்மா இதுவரை 232 போட்டிகளில் விளையாடி 6 ஆயிரத்து 14 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் ரோகித் சர்மா ஒரு சதமும் 41 அரைசதமும் விளாசியுள்ளார். மேலும், இதில் 535 பவுண்டரியும் 247 சிக்ஸர்களும் விளாசியுள்ளார். ஐபிஎல் தொடரில் இவரது அதிகபட்ச ஸ்கோர் 109 ரன்கள். அதேபோல் ஐபிஎல் தொடரில் இவரது ஸ்ட்ரைக் ரேட்130.03ஆகவும் ஆவரேஜ் ஸ்கோர் 30.22 ஆகவும் உள்ளது.  சிறப்பாக ஃபீல்டிங் செய்யும் இவர் இதுவரை 97 கேட்ட்சுகளை பிடித்துள்ளார். ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரையில் ரோகித் சர்மா தனது கேப்டன்சியால் 2013, 2015, 2017, 2019 மற்றும் 2020ஆம் ஆண்டுகளில் கோப்பையை வென்று அசத்தியுள்ளார். இதுவரை வேறு எந்த கேப்டனோ அணியோ ஐந்து கோப்பைகளை வென்றதில்லை என்பது குறிப்பிடத்தகக்து.  


அதேபோல், 2013ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை மொத்தம் 143 போட்டிகளில் மும்பை அணியை  வழிநடத்தியுள்ள இவர் 79 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். அதேபோல் 60 போட்டிகளில் தோல்வியையும் எதிர்கொண்டு உள்ளார். மேலும் 4 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை. அதேபோல் இவரது வெற்றி சதவீசம் என்பது 56.64% ஆக உள்ளது. இந்த ஆண்டில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள மும்பை அணி 2 போட்டிகளில் வெற்றியும் 2 போட்டிகளில் தோல்வியும் அடைந்துள்ளது.