IPL 2023 LSG vs KKR Score LIVE : ஒரு ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தி Play-Offக்குள் நுழைந்தது லக்னோ..!

IPL 2023 LSG vs KKR: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியின் லைவ் அப்டேட்டுகளுக்கு ஏபிபியுடன் இணைந்து இருங்கள்.

த. மோகன்ராஜ் மணிவேலன் Last Updated: 20 May 2023 11:40 PM
IPL 2023 LSG vs KKR Score: லக்னோ வெற்றி..!

கடைசி மூன்று பந்துகளில் 18 ரன்கள் தேவைப்பட்டது. அதில் முதல் பந்தில் ரிங்கு சிங் சிக்ஸர் அடித்தார். அடுத்த பந்தில் பவுண்டரி எடுக்கப்பட்டது. மூன்றாவது பந்தில் ஒரு சிக்ஸர் எடுக்கப்பட்டது. இதனால் லக்னோ அணி ஒரு ரன் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி, ப்ளேஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டை இழந்து 175 ரன்கள் எடுத்தது. 

IPL 2023 LSG vs KKR Score: நரேன் ரன் அவுட்..!

அதிரடியாக ஆடுவார் என எதிர்பார்க்கப்பட்ட சுனில் நரேன் தனது விக்கெட்டை ரன் அவுட் முறையில் தனது விக்கெட்டை இழந்துள்ளார். 

IPL 2023 LSG vs KKR Score: ஷர்துல் தாக்கூர் அவுட்..!

போட்டியின் 18வது ஓவரில் ஷர்துல் தாக்கூர் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

IPL 2023 LSG vs KKR Score: ரஸல் அவுட்..!

போட்டியின் முக்கியமான கட்டத்தில் ரஸல் தனது விக்கெட்டை இழந்துள்ளார். தற்போது கொல்கத்தா அணி 5 விக்கெட்டுகளை இழந்துள்ளது. 

IPL 2023 LSG vs KKR Score: குர்பாஸ் அவுட்..!

கொல்கத்தாவின் குர்பாஸ் 15 பந்துகளில் 10 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறியுள்ளார். 

IPL 2023 LSG vs KKR Score: குர்பாஸ் அவுட்..!

கொல்கத்தாவின் குர்பாஸ் 15 பந்துகளில் 10 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறியுள்ளார். 

IPL 2023 LSG vs KKR Score: 13 ஓவர்கள் முடிவில்..!

13 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகளை இழந்து 103 ரன்கள் சேர்த்துள்ளது. 

IPL 2023 LSG vs KKR Score: 100 ரன்களை எட்டிய கொல்கத்தா..!

12. 4 ஓவர்களில் கொல்கத்தா அணி 3 விக்கெட்டுகளை இழந்திருந்தாலும் 100 ரன்களை எட்டியுள்ளது. 

IPL 2023 LSG vs KKR Score: மூன்றாவது விக்கெட்டை இழந்த கொல்கத்தா..!

10வது ஓவரின் இறுதியில் ராய் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 10 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 82 ரன்கள் சேர்த்துள்ளனர். 

IPL 2023 LSG vs KKR Score: இலக்கைத் துரத்தும் கொல்கத்தா..!

லக்னோ நிர்ணயித்த 177 ரன்கள் இலக்கை நோக்கி களமிறங்கிய கொல்கத்தா அணி 8.3 ஓவரில் 2 விக்கெட்டுகளை இழந்து 78 ரன்கள் சேர்த்துள்ளது. 

IPL 2023 LSG vs KKR Score: அரைசதம் அடித்த வேகத்தில் விக்கெட்டை இழந்த பூரன்..!

போட்டியின் 10வது ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் சிக்ஸர் விளாசி 58 ரன்கள் சேர்த்த  பூரன் அடுத்த பந்தில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

IPL 2023 LSG vs KKR Score: 16 ஓவர்கள் முடிவில்..!

16 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 5 விக்கெட்டுகளை இழந்து 122 ரன்கள் சேர்த்துள்ளது. 

IPL 2023 LSG vs KKR Score: 100 ரன்களை எட்டிய லக்னோ..!

13 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 5 விக்கெட்டுகளை இழந்து 100 ரன்கள் சேர்த்துள்ளது. 

IPL 2023 LSG vs KKR Score: வருண் சக்ரவர்த்தியை சிதைத்த பூரன்..!

தான் சந்தித்த 4 பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் விளாசி மிரட்டியுள்ளார் பூரன். 

IPL 2023 LSG vs KKR Score: டி காக் காலி..!

பொறுப்புடன் ஆடி வந்த டி காக் தனது விக்கெட்டை 28 ரன்கள் சேர்த்த நிலையில் வருண் சக்ரவர்த்தி பந்து வீச்சில் இழந்து வெளியேறினார். 

IPL 2023 LSG vs KKR Score: 10 ஓவர் முடிந்தது.. கியரை மாற்றுமா லக்னோ?

10 ஓவர்கள் முடிவில் லக்னோ அணி 4 விக்கெட்டுகளை இழந்து 73 ரன்கள் சேர்த்துள்ளது. 

IPL 2023 LSG vs KKR Score: குர்னல் பாண்டியா அவுட்..!

லக்னோ அணியின் கேப்டன் குர்னல் பாண்டியா 8 பந்தில் 9 ரன்கள் சேர்த்த நிலையில் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

IPL 2023 LSG vs KKR Score: 7வது ஓவரில் மீண்டும் ஒரு விக்கெட்..!

மார்கஸ் ஸ்டாய்னிஸ் தனது விக்கெட்டை ரன் ஏதும் எடுக்காமல் இழந்துள்ளார். இவரது விக்கெட் 6.5வது ஓவரில் கைப்பற்றியது கொல்கத்தா..!

IPL 2023 LSG vs KKR Score: இரண்டாவது விக்கெட்டை இழந்த லக்னோ..!

6.3 ஓவரில் லக்னோ அணியின் மன்கட் தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். இவர் 20 பந்தில் 26 ரன்கள் சேர்த்தார். 

IPL 2023 LSG vs KKR Score: பவர்ப்ளேவில் 50ஐக் கடந்த லக்னோ..!

பவர்ப்ளே முடிவில் லக்னோ அணி ஒரு விக்கெட்டை இழந்து 54 ரன்கள் சேர்த்துள்ளது. 

IPL 2023 LSG vs KKR Score: 5 ஓவரில் லக்னோ..!

நிதானமாக ஆடி வரும் லக்னோ அணி 5 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட்டை இழந்து 39 ரன்கள் சேர்த்துள்ளது. 

IPL 2023 LSG vs KKR Score: முதல் விக்கெட்..!

போட்டியின் மூன்றாவது ஓவரின் மூன்றாவது பந்தில் லக்னோவின் கரண் சர்மா தனது விக்கெட்டை இழந்து வெளியேறினார். 

IPL 2023 LSG vs KKR Score: தொடங்கியது போட்டி..!

கொல்கத்தாவுக்கு எதிராக லக்னோ அணி பேட்டிங் செய்ய களமிறங்கியுள்ளது. 

IPL 2023 LSG vs KKR Score: டாஸ்..!

டாஸ் வென்ற கொல்கத்தா பந்து வீச முடிவு செய்துள்ளது. 

Background

ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற உள்ள இரண்டாவது லீக் போட்டியில், லக்னோ மற்றும் கொல்கத்தா அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன.


ஐபிஎல் தொடர்:


ஐ.பி.எல். திருவிழா நிறைவு கட்டத்தை நெருங்கி விட்டது. கடந்த மார்ச் 31 ஆம் தேதி தொடங்கிய ஐ.பி.எல். லீக் போட்டிகளில் இதுவரை 66 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. 10 அணிகளில் குஜராத் டைட்டன்ஸ் அணி மட்டுமே பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது. மீதமுள்ள 3 இடங்களுக்கு மும்பை, சென்னை, லக்னோ, மற்றும் பெங்களூரு அணிகள் முட்டிமோதுகின்றன. பஞ்சாப், டெல்லி மற்றும் ஐதராபாத் ஆகிய அணிகள் ஏற்கனவே,  தொடரிலிருந்து வெளியேறிவிட்ட நிலையில், ராஜஸ்தான், கொல்கத்தா அணிகள் ஏதாவது அதிசயம் நடக்காதா என காத்திருக்கின்றன.


கொல்கத்தா - லக்னோ பலப்பரீட்சை: 


இந்த சூழலில் இன்று நடைபெற உள்ள இரண்டாவது லீக் போட்டியில் க்ருணால் பாண்ட்யா தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் நிதிஷ் ராணா தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் இப்போட்டியின் நேரலையை, ரசிகர்கள் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஜியோ சினிமா செயலியிலும் நேரலையில் கண்டுகளிக்கலாம்.


லக்னோ அணி நிலவரம்:


லக்னோ அணியை பொறுத்தவரையில் நடப்பு தொடரில் 13 போட்டிகளில் விளையாடி, 7 வெற்றி மற்றும் ஒரு டிராவுடன் 15 புள்ளிகளை பெற்று புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தில் நீடிக்கிறது. இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால், பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகிவிடும். கடைசியாக விளையாடிய லீக் போட்டியில், பேட்டிங்கில் வலுவான மும்பை அணியை 5 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றி கொடுத்த உத்வேகத்துடன் லக்னோ அணி இன்று களமிறங்குகிறது. 


கொல்கத்தா அணி நிலவரம்:


கொல்கத்தா அணியை பொறுத்தவரையில் 13 போட்டிகளில் விளையாடி 6 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில், 7வது இடத்தில் நீடிக்கிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால், மீதமுள்ள இரண்டு லீக் போட்டிகளின் வெற்றி, தோல்வி முடிவுகளின் அடிப்படையில் பிளே ஆஃப் சுற்றிற்கு முன்னேற கொல்கத்தா அணிக்கு லேசான வாய்ப்புள்ளது. அதேநேரம், வலுவான லக்னோ அணியை கொல்கத்தா வீழ்த்த, தனது முழு முயற்சியையும் வெளிப்படுத்த வேண்டியுள்ளது. தனது கடைசி லீக் போட்டியை உள்ளூர் மைதானத்தில் விளையாடுவது அந்த அணிக்கு சாதகமாக பார்க்கப்படுகிறது.


மழை பாதிப்பு:


போட்டி நடைபெறும் கொல்கத்தாவில் கடந்த இரண்டு நாட்களாகவே மழை பெய்து வருகிறது. இன்று மாலையும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை மழை பெய்து போட்டி கைவிடப்பட்டால், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். இதையடுத்து பிளே-ஆஃப் சுற்றிற்கு முன்னேற மற்ற போட்டிகளின் முடிவுகளுக்காக லக்னோ அணி காத்திருக்க வேண்டி இருக்கும்.


நேருக்கு நேர்:


ஐபிஎல் சீசனில் கடந்தாண்டு தான் லக்னோ அணி அறிமுகமானது. அந்த சீசனில் கொல்கத்தா அணியை லக்னோ 2 முறை எதிர்கொண்டது. இந்த 2 போட்டிகளிலும் லக்னோ அணியே வெற்றி பெற்றது. இந்த 2 ஆட்டத்திலும் லக்னோ அணியே முதலில் பேட் செய்திருந்தது. இந்நிலையில் இன்று நடக்கும் போட்டியில் பழைய தோல்விக்கு கொல்கத்தா பழி தீர்க்க முயற்சிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மைதானம் எப்படி:


ஈடன் கார்டன் மைதானம் பொதுவாகவே பேட்டிங்கிற்கு தான் சாதகமாக இருக்கும். இன்றைய போட்டியிலும் இது தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இன்றைய போட்டியில் டாஸ் வெல்லும் அணி, முதலில் பந்துவீசையே தேர்வு செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

TRENDING NOW

© Copyright@2024.ABP Network Private Limited. All rights reserved.