ஐபிஎல் 2023 சீசனில் கீரன் பொல்லார்டைத் தக்கவைத்துக்கொள்வது குறித்து மும்பை இந்தியன்ஸ் அணி கடினமான முடிவை எடுக்க வேண்டிய நேரம் இது என்று முன்னாள் இந்திய அணி ஜாம்பவான் ஹர்பஜன் சிங் கூறியுள்ளார். 


மேலும் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி, அடுத்த 4 முதல் 5 ஆண்டு அணியின் நலனை மனத்தில் கொண்டு வீரர்களை தேர்வு செய்ய வேண்டும் என தெரிவித்தார். 


இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், “மும்பை இந்தியன்ஸ் அணி கீரன் பொல்லார்டை விடுவிப்பது மிகவும் கடினமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன். அவர் பல வருடங்களாக அணிக்காக சிறப்பாக செயல்பட்டுள்ளார். ஆனால் நீங்கள் சில கடினமான அழைப்புகளை எடுக்க வேண்டிய நேரங்கள் இது. அடுத்த 4-5 ஆண்டுகளுக்கு ஒரு அணியை உருவாக்கி, பல ஆண்டுகளாக பொல்லார்டு செய்ததைச் செய்யக்கூடிய ஒருவரைக் கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டும் என தெரிவித்தார். 


தொடர்ந்து, டிம்பரில் நடைபெறவுள்ள ஐபிஎல் 2023 ஏலத்தில் மும்பை இந்தியன்ஸ் ஆஸ்திரேலிய ஆல்-ரவுண்டர் கேமரூன் கிரீனை குறிவைக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்.


ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி கடந்த ஐபிஎல் தொடரில் மோசமான சூழ்நிலையை கொண்டிருந்தது. மும்பை அணி 14 போட்டிகளில் அதில் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றிபெற முடிந்ததால், பிளே-ஆஃப் சுற்றில் இருந்து வெளியேறிய முதல் அணியானது. இதையடுத்து மும்பை அணியின் உரிமையாளர்களான ஆகாஷ் மற்றும் நீதா அம்பானி தங்கள் வீரர்களை ஆதரிப்பதில் பெயர் பெற்றிருந்தாலும் , இந்த முறை சிறு ஏலத்திற்கு முன்னபாக சில முக்கிய வீரர்களை வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர். 


அதன் அடிப்படையில், வெஸ்ட் இண்டீஸ் ஆல்-ரவுண்டர் கீரன் பொல்லார்ட் ,ஃபேபியன் ஆலன் மற்றும் இங்கிலாந்தின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் டைமல் மில்ஸ் ஆகியோரை மும்பை அணியிலிருந்து வெளியேற்றப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. 


கீரன் பொல்லார்ட்:


மும்பை அணிக்காக கீரன் பொல்லார்டின் பங்கு யாரலும் மறக்க முடியாத ஒன்று. மும்பை அணி 5 முறை கோப்பை வென்றபோது, அதற்கு முக்கிய பங்காக பொல்லார்ட் பெயர் இடம் பெற்று இருக்கும். கடந்த 2010 ம் ஆண்டு மும்பை அணியில் இணைந்த பொல்லார்ட் கிட்டதட்ட 12 ஆண்டுகள் சிறப்பாக செயல்பட்டுள்ளார். மும்பை அணிக்காக இதுவரை அவர் 3412 ரன்களும், 69 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார். ஐபிஎல் 2022க்கு முன்னதாக மும்பை இந்தியன்ஸ் அணியால் கீரன் பொல்லார்டு ரூ. 6 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 


ஐபிஎல் 2022: பொல்லார்ட், ஆலன் மற்றும் மில்லின் பங்களிப்பு


கீரன் பொல்லார்ட்



  • போட்டிகள்: 11 | அடித்த ரன்கள்: 144 | அதிக மதிப்பெண்: 25 | எடுத்த விக்கெட்டுகள்: 04 | சிறந்த பந்துவீச்சு புள்ளிகள்: 2/8


ஃபேபியன் ஆலன்



  •  போட்டிகள்: 01 | அடித்த ரன்கள்: 08 | அதிக மதிப்பெண்: 08 | எடுத்த விக்கெட்டுகள்: 01 | சிறந்த பந்துவீச்சு புள்ளிகள்: 1/46


டைமல் மில்ஸ்



  • போட்டிகள்: 05 | எடுத்த விக்கெட்டுகள்: 06 | சிறந்த பந்துவீச்சு புள்ளிவிவரங்கள்: 3/35 | பொருளாதாரம்: 9.85