IPL 2023 GT vs PBKS Playing XI:


குஜராத் டைட்டன்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் அணிகளுக்கு இடையிலான போட்டி பிசிஏ ஐஎஸ் பிந்த்ரா மைதானத்தில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற குஜராத் டைட்டன்ஸ் அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. 


குஜராத் அணியைப் பொறுத்தவரையில் கடந்த போட்டியில் கொல்கத்தாவுக்கு எதிராக அந்த அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா களமிறங்கவில்லை. மேலும் அந்த போட்டியில் குஜராத் அணி அதிர்ச்சிகரமாக தோல்வியைச் சந்தித்தது. ஹர்திக் பாண்டியா இந்த போட்டியில் களமிறங்குகிறார். 


குஜராத் டைட்டன்ஸ் அணி இந்த சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு எதிரான வெற்றிகளுடன் தொடங்கியது. இருப்பினும், தங்களது கொல்கத்தா அணிக்கு எதிரான கடைசி போட்டியில் தோல்வியை தழுவியது. 


பஞ்சாப் அணியை பொறுத்தவரை, தங்களது தொடக்க இரண்டு போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிராக வென்றது. ஆனால்,  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான கடைசி போட்டியில் தோல்வியை சந்தித்தது. 


நேருக்கு நேர்:


பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் இதுவரை 2 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில், இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளன. இவர்கள் மோதிய இரண்டு போட்டிகளிலும் இரண்டாவது பேட்டிங் செய்த அணியே வெற்றிபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 


குஜராத் அணியைப் பொறுத்தவரையில் மிகவும் பலமான அணியாக உள்ளது. பேட்டிங் மற்றும் பவுலிங்கில் திறமையான இளம் படையினரை அதிகம் கொண்டுள்ள அணியாக உள்ளது. இந்த அணி நடப்புச் சாம்பியனாக மிகவும் வழுவாக காணப்படுகிறது. அதேபோல், 15 அண்டுகளாக கோப்பையை வெல்ல போராடிக் கொண்டுள்ள அணியாக இது உள்ளது. ஆனால் ஒரு கோர் டீம் ஆக பஞ்சாப் அணி ஒரு போதும் அமையாதது கோப்பையை வெல்லாததற்கு காரணமாக பார்க்கப்படுகிறது. இந்த சீசனில் சிறப்பான பங்களிப்பை பஞ்சாப் அணி அளித்து வருகிறது. 


பஞ்சாப் கிங்ஸ் பிளேயிங் லெவன்


பிரப்சிம்ரன் சிங், ஷிகர் தவான்(கேப்டன்), மேத்யூ ஷார்ட், பானுகா ராஜபக்சே, ஜிதேஷ் சர்மா(விக்கெட் கீப்பர்), சாம் குர்ரான், ஷாருக் கான், ஹர்பிரீத் பிரார், ககிசோ ரபாடா, ரிஷி தவான், அர்ஷ்தீப் சிங்


பஞ்சாப் கிங்ஸ் அணியின் இம்பேக்ட் ப்ளேயர்கள்


சிக்கந்தர் ராசா, ஹர்பிரீத் சிங் பாட்டியா, ராகுல் சாஹர், அதர்வா டைடே, குர்னூர் ப்ரார்


குஜராத் டைட்டன்ஸ் பிளேயிங் லெவன்


விருத்திமான் சாஹா(விக்கெட் கீப்பர்), ஷுப்மான் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் டெவாடியா, ரஷித் கான், அல்சாரி ஜோசப், முகமது ஷமி, மோகித் சர்மா, ஜோசுவா லிட்டில்


குஜராத் டைட்டன்ஸ் அணியின் இம்பேக்ட் ப்ளேயர்கள்


விஜய் சங்கர், சிவம் மாவி, ஜெயந்த் யாதவ், அபினவ் மனோகர், ஸ்ரீகர் பாரத்