GT vs DC IPL 2023 டெல்லி மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையேயான போட்டியில் களமிறங்கும் வீரர்களின் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அதோடு இரு அணிகளும் இந்த போட்டிக்கான தங்களது இம்பேக்ட் வீரர்களின் பட்டியலையும் அறிவித்துள்ளன.
குஜராத் அணி பேட்டிங்:
நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் ஏழாவது லீக் போட்டியில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் மற்றும் டேவிட் வார்னர் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதுகின்றன. டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. தொடரின் முதல் போட்டியில் குஜராத் அணி வென்று புள்ளிக்கணக்கை தொடங்கியுள்ளது. ஆனால், டெல்லி அணியோ தனது முதல் லீக் போட்டியில் தோல்வியை சந்தித்துள்ளது. இதனால் வெற்றிப்பயணத்தை தொடர குஜராத் அணியும், புள்ளிக்கணக்கை தொடங்க டெல்லியும் முனைப்பு காட்டி வருகின்றன. உள்ளூர் ரசிகர்களுக்கு மத்தியில் நடைபெறுவதால் டெல்லிக்கு இந்த போட்டி சாதகமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குஜராத் அணி பிளேயிங் லெவன்:
விருத்திமான் சாஹா(விக்கெட் கீப்பர்), ஷுப்மான் கில், சாய் சுதர்ஷன், டேவிட் மில்லர், ஹர்திக் பாண்டியா(கேப்டன்), ராகுல் திவேதியா, ரஷித் கான், முகமது ஷமி, ஜோஷ்வா லிட்டில், யாஷ் தயாள், அல்சாரி ஜோசப்
குஜராத் அணி இம்பேக்ட் வீரர்கள்:
சாய் ஷோர், ஜெயந்த் யாதவ், விஜய் சங்கர், அபினவ் மனோகர், கேஎஸ் பாரத்
டெல்லி அணி பிளேயிங் லெவன்:
டேவிட் வார்னர் (கேப்டன்), ப்ரித்வி ஷா, மிட்செல் மார்ஷ், ரிலீ ரோசோவ், சர்ப்ராஸ்கான் (விக்கெட் கீப்பர்), போரல், அமன் கான், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ரோர்ட்ஜே, லலித் யாதவ்,
டெல்லி அணி இம்பேக்ட் வீரர்கள்:
மணீஷ் பாண்டே, போவல், கலீல் அகமது, சகாரியா,
நேருக்கு நேர்:
இரு அணிகளும் இதுவரை ஒருமுறை மட்டுமே மோதியுள்ளன. கடந்த ஆண்டு நடைபெற்ற அந்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் 14 ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல்ஸை வீழ்த்தியது. இதனால் அதற்கு பழி தீர்க்கும் வகையில் இன்றைய போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அருண் ஜெட்லி மைதானத்தில் டெல்லி அணி வரலாறு..!
போட்டிகள்: 70
வெற்றி: 31
தோல்வி: 38
முடிவு இல்லை: 1
முதலில் பேட்டிங் வெற்றி: 13
சேஸிங்: 18
அதிகபட்சமாக கடந்த 2011 ம் ஆண்டு பஞ்சாப் அணிக்கு எதிராக டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 231 ரன்கள் எடுத்தது.
குறைந்தபட்சமாக் கடந்த 2013ம் ஆண்டு சென்னை அணிக்கு எதிராக 83 ரன்களுக்குள் டெல்லி அணி சுருண்டது.