குஜராத் டைட்டன்ஸ் அணி  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரை 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து பிளே ஆஃப் அடையும் அவர்களின் கனவை உடைத்தது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் 197 ரன்கள் எடுத்தது.  அதிகபட்சமாக விராட் கோலி 101 ரன்கள் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 


வெற்றி பெற வைத்த கில்:


தொடர்ந்து, இலக்கை துரத்தை குஜராத் அணியின் தொடக்க வீரர் கில்லின் சிறப்பான இன்னிங்ஸால் 19.1 ஓவரில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் சுப்மன் கில் 52 பந்துகளில் 104 ரன்கள் (5 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள்) எடுத்து ஆட்டமிழக்காமல் குஜராத் அணிக்கு வெற்றியை தேடி தந்தார்.










கில் சகோதரியை சீண்டிய ரசிகர்கள்:


இந்த நிலையில், இந்த தோல்வியை ஏற்றுகொள்ளாத சில பெங்களூரு ரசிகர்கள் எல்லை மீறி கில்லின் சகோதரியை சமூக வலைத்தளங்களில் தவறாக பேசி வருகின்றனர். இந்த போட்டியில் ஒரு அற்புதமான இன்னிங்ஸுக்குப் பிறகு கில் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு புகைப்படத்தை பதிவித்தார். அப்போது அவரது சகோதரி ஷானீல் கில், சுப்மன் கில்லுக்கு வாழ்த்து தெரிவித்தார். இந்த போஸ்ட்டுக்கு பிறகுதான் பெங்களூரு ரசிகர்கள் ஷானீல் கில்லை தவறாக வசைபாடி வருகின்றன. 






இதையடுத்து சுப்மன் கில்லின் சகோதரியை சமூக ஊடகங்களில் ட்ரோல் செய்பவர்களை டெல்லி மகளிர் ஆணையத்தின் (டிசிடபிள்யூ) தலைவர் ஸ்வாதி மாலிவால் கடுமையாக சாடியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், “ உங்களுக்கு பிடித்த அணி ஒரு போட்டியில் தோல்வியடைந்தற்காக சுப்மன் கில்லின் சகோதரியை ட்ரோல் செய்வது வெட்கக்கேடானது. இதற்கு முன்பு விராட் கோலியின் மகளையும் தவறாக பேசினார்கள். அவர்கள் மீதும் நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். தற்போது கில்லின் சசோதரியை தவறாக பேசிய அனைவரும் மீதும் டெல்லி மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்" என ட்வீட் செய்திருந்தார்.