முன்னாள் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி மீண்டும் டெல்லி கேபிடல்ஸ் அணியின் கிரிக்கெட் இயக்குநராக சேர இருப்பதாக ஐபிஎல் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன. 


ஐபிஎல் தொடரில் 16வது சீசன் தொடங்குவதற்கு இன்னும் 2 மாதங்களே உள்ள நிலையில், டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. முன்னாள் இந்திய கேப்டனும், முன்னாள் பிசிசிஐ தலைவருமான சவுரவ் கங்குலி, டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக களமிறங்குகிறார். 


அறிக்கையின்படி, முன்னாள் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி டெல்லி கேப்பிடல்ஸ் கிரிக்கெட் இயக்குநராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுரவ் கங்குலி கடந்த 2019 பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்பதற்கு முன்பு டெல்லி கேபிடல்ஸ் அணியின் ஆலோசகராக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.