சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் 2023 சீசனின் இறுதிப்போட்டி மழை காரணமாக இன்று மாற்றப்பட்டது. இதையடுத்து, இதுவரை நடந்த 16 ஐபிஎல் சீசனில் ரிசர்வ் நாளில் இறுதிப்போட்டி நடைபெறுவது இதுவே முதல்முறை.


இந்தநிலையில், போட்டி தொடங்குவதற்கு முன்பாகவே சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணி என்றும், ரன்னர் அப் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி என்றும் ஸ்கிரிப்ட் எழுதப்பட்டதாக ட்விட்டரில் ட்விட்டர் வாசிகள் புகைப்படத்துடன் கூடிய போஸ்ட்டை பதிவிட்டு கேள்வி எழுப்பி வருகின்றன. 










இன்று நடைபெறும் போட்டி பெரியளவில் மழையால் எந்தவொரு பாதிப்பையும் சந்திக்காது என்று தெரிகிறது. தற்போது வரை அகமதாபாத்தில் மழை பெய்யவில்லை. 


இதையடுத்து, தற்போது டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் எம்.எஸ்.தோனி பந்துவீச்சை தேர்வு செய்தார். 


போட்டியின் போது மழை பெய்தால் என்ன நடக்கும்:



  • போட்டி தொடங்குவதற்கு முன்பே மழை பெய்தால், வழக்கத்தை காட்டிலும் கூடுதலாக 2 மணி நேரம் வழங்கப்படும்.

  • அதன்படி, 9.35 மணிக்கு போட்டி தொடங்கினால் கூட ஓவர்கள் எதுவும் குறைக்கப்படமால் முழு போட்டி நடைபெறும்

  • மழை தொடர்ந்தால் அதற்கான நேரத்திற்கு ஏற்றவாறு ஓவர்கள் குறைக்கப்பட்டு போட்டி நடத்தப்படும்

  • நள்ளிரவு 1.20 மணிக்குள் அதிகபட்சம் 5 ஓவர்கள் தொடங்கி குறைந்தபட்சம் சூப்பர் ஓவர் முறையிலாவது போட்டியை நடத்தி முடிக்க முயற்சிகள் எடுக்கப்படும்.

  • ஒருவேளை, இன்றும் நள்ளிரவு 1.20 மணி வரையில் மழை தொடர்ந்து சூப்பர் ஓவருக்கு கூட வாய்ப்பில்லாமல் போட்டி ரத்தானால், புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடித்த குஜராத் அணிக்கு கோப்பை வழங்கப்படும்


இரு அணிகளின் பிளேயிங் 11 விவரம்:


சென்னை சூப்பர் கிங்ஸ்:


ருதுராஜ் கெய்க்வாட், டெவோன் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயீன் அலி, அம்பதி ராயுடு, ரவீந்திர ஜடேஜா, எம்எஸ் தோனி (கேப்டன் & விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், மதீஷா பத்திரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்ஷனா


குஜராத் டைட்டன்ஸ்:


விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), சுப்மன் கில், சாய் சுதர்சன், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), விஜய் சங்கர், டேவிட் மில்லர், ராகுல் தெவாடியா, ரஷித் கான், மோகித் ஷர்மா, நூர் அகமது, முகமது ஷமி