IPL 2023: ரிஷ்ப் பண்ட் இல்லாத டெல்லி அணி என்பது எங்களுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும் என டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளார் ரிக்கி பாண்டிங் தெரிவித்துள்ளார். 

ரிஷப்பண்ட் படுகாயம்:

ஐபிஎல் போட்டியில் களம் காணவுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் கடந்த ஆண்டு சாலை விபத்து ஒன்றில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருகிறார். இன்னும் கிரிக்கெட் விளையாடுவதற்கான முழு உடல் தகுதியை எட்டாத நிலையில், அவர் இந்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் விளையாட மாட்டார் என்பதை அறிவிக்க அவசியமில்லாத தகவலாக உள்ளது. 

ஜெர்சியில் ரிஷப்பண்ட்:

இந்நிலையில் டெல்லி அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, “ ரிஷப்பண்ட் இல்லாதது எங்களுக்கு மிகவும் பலவீனம் தான். ஒரு கேப்டனாகவும், சிறந்த விக்கெட் கீப்பராகவும், மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாகவும் டெல்லி அணிக்கு நம்பிக்கையாக இருந்த ரிஷப்பண்ட் இல்லாதது, எங்களுக்கு உண்மையிலேயே பெரிய இழப்பு தான். அவரது இடத்தினை நிரப்ப இந்திய வீரர்களில் ஒருவரை நாங்கள் நியமிக்க ஆலோசித்து வருகிறோம். மேலும், இந்த சீசனில் எங்களின் ஜெர்சியில் அல்லது தொப்பியில் ரிஷப் பண்ட்டின் ஜெர்சி நெம்பரை சேர்த்துக்கொள்ள திட்டமிட்டுள்ளோம்" என்றார். 

மேலும், "இம்முறை டெல்லி அணியை பிரித்வி ஷா வழிநடத்தினால் நன்றாக இருக்கும் என நினைக்கிறேன். அவரது உடற்தகுதி குறித்து பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். இம்முறை அவர் தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார். அவரை இதற்கு முன்னர் இப்படி பார்த்தது இல்லை. மிகவும் மன உறுதியுடன் பிரித்விஷா காணப்படுகிறார்.  இந்த சீசன் பிரித்வி ஷாவின் மிகச் சிறந்த சீசனாக இருக்கும்" என கூறியுள்ளார். ஆனால் இம்முறை டெல்லி அணியை ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் வழிநடத்தவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

ஐபிஎல் 2023 டெல்லி கேபிடல்ஸ் அணியின்  முழுமையான போட்டி விபரம்

1 ஏப்ரல் 1, 2023 LSG VS DC 7:30 PM லக்னோ
2 ஏப்ரல் 4, 2023 DC VS GT 7:30 PM டெல்லி
3 ஏப்ரல் 8, 2023 ஆர்ஆர் விஎஸ் டிசி 3:30 PM கவுகாத்தி
4 ஏப்ரல் 11, 2023 DC VS MI 7:30 PM டெல்லி
5 ஏப்ரல் 15, 2023 RCB VS DC 3:30 PM பெங்களூர்
6 ஏப்ரல் 20, 2023 DC VS KKR 7:30 PM டெல்லி
7 ஏப்ரல் 24, 2023 SRH VS DC 7:30 PM ஹைதராபாத்
8 ஏப்ரல் 29, 2023 DC VS SRH 7:30 PM டெல்லி
9 மே 2, 2023 GT VS DC 7:30 PM அகமதாபாத்
10 மே 6, 2023 DC VS RCB 7:30 PM டெல்லி
11 மே 10, 2023 CSK VS DC 7:30 PM சென்னை
12 மே 13, 2023 DC VS PBKS 7:30 PM டெல்லி
13 மே 17, 2023 பிபிகேஎஸ் VS டிசி 7:30 PM தர்மசாலா
14 மே 20, 2023 DC VS CSK 3:30 PM டெல்லி