ஐபிஎல் தொடரில் நேற்றைய நாளில் இரண்டு விறுவிறுப்பான போட்டிகள் நடைபெற்றது. அதில், இரவு நடைபெற்ற போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை 20 பந்துகள் மீதமுள்ள நிலையில் 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி டெல்லி கேப்பிடல்ஸ் அபார வெற்றியைப் பதிவு செய்தது. டெல்லி வீரர் பில் சால்ட் அதிரடியாக விளையாடி 45 பந்துகளில் (8 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்கள்) 87 ரன்கள் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினார். டாஸ் வென்ற பெங்களூரு அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்து, 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 181 ரன்கள் குவித்தது. அடுத்து களமிறங்கிய டெல்லி அணி 16.4 ஓவர்களிலேயே இலக்கை துரத்தி வெற்றிபெற்றது. 


தொடர்ந்து இரண்டாவது வெற்றியின் மூலம் டெல்லி அணி 10 அணிகள் கொண்ட பட்டியலில் 9வது இடத்திற்கு முன்னேறியது. மறுபுறம் நேற்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தோல்வியை சந்தித்து 5வது இடத்தில் உள்ளது.


ஐபிஎல் 2023 புள்ளிகள் அட்டவணையில் தற்போது குஜராத் டைட்டன்ஸ் 14 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது, அதே நேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் இப்போது மும்பை இந்தியன்ஸை வீழ்த்தி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.


லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 11 புள்ளிகளுடன் 3வது இடத்திலும், ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், மும்பை இந்தியன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் ஆகியவை தலா 10 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் தலா 8 புள்ளிகளுடன் 8வது மற்றும் 9வது இடங்களை பிடித்துள்ளன. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 வெற்றிகள் மட்டுமே பெற்று வெறும் 6 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் உள்ளது.


ஐபிஎல் 2023 புள்ளிகள் அட்டவணை: 



  1. குஜராத் டைட்டன்ஸ் (14 புள்ளிகள்)

  2. சென்னை சூப்பர் கிங்ஸ் (13 புள்ளிகள்)

  3. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (13 புள்ளிகள்)

  4. ராஜஸ்தான் ராயல்ஸ் (10 புள்ளிகள்)

  5. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (10 புள்ளிகள்)

  6. மும்பை இந்தியன்ஸ் (10 புள்ளிகள்)

  7. பஞ்சாப் கிங்ஸ் (10 புள்ளிகள்)

  8. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (8 புள்ளிகள்)

  9. டெல்லி கேபிடல்ஸ் (8 புள்ளிகள்)

  10. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (6 புள்ளிகள்)


ஆரஞ்சு கேப் :


ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் கேப்டன் ஃபாப் டு பிளெசிஸ் 10 போட்டிகளில் 511 ரன்கள் குவித்து அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர் டெவோன் கான்வே 10 இன்னிங்ஸ்களில் 458 ரன்களுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கிறார். ராஜஸ்தான் அணியின் யஷஸ்வி ஜெய்ஸ்வால், பெங்களூர் அணியின் விராட் கோலி மற்றும் சென்னை அணியின் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோர் முறையே 442, 419 மற்றும் 384 ரன்களுடன் உள்ளனர். 



  1. ஃபாஃப் டு பிளெசிஸ் (ஆர்சிபி) - 511 ரன்கள்

  2. டெவோன் கான்வே (சிஎஸ்கே) - 458 ரன்கள்

  3. யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ஆர்ஆர்) - 442 ரன்கள்

  4. விராட் கோலி (ஆர்சிபி) - 419 ரன்கள்

  5. ருதுராஜ் கெய்க்வாட் (சிஎஸ்கே) - 384 ரன்கள்


பர்பிள் கேப்: 


சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே 11 இன்னிங்ஸில் 19 விக்கெட்டுகளை எடுத்து முதலிடத்தில் உள்ளார். குஜராத் டைட்டன்ஸ் அணியை சேர்ந்த பந்துவீச்சாளர்களான முகமது ஷமி மற்றும் ரஷித் கான் ஆகியோர் தலா 18 விக்கெட்டுகளுடன் இரண்டு மற்றும் மூன்றாவது இடத்தை பகிர்ந்துள்ளனர். மும்பை அணியின் பியூஷ் சாவ்லா 17 விக்கெட்டுகளையும், பஞ்சாப் கிங்ஸ் அணியின் அர்ஷ்தீப் சிங் 16 விக்கெட்டுகளையும் வீழ்த்தி 4வது மற்றும் 5வது இடங்களை பிடித்துள்ளனர்.



  1. துஷார் தேஷ்பாண்டே (சிஎஸ்கே) - 19 விக்கெட்கள்

  2. முகமது ஷமி (ஜிடி)-18 விக்கெட்கள்

  3. ரஷித் கான் (ஜிடி)-18 விக்கெட்கள்

  4. பியூஷ் சாவ்லா (எம்ஐ) 17 விக்கெட்கள்

  5. அர்ஷ்தீப் சிங்(பஞ்சாப்)- 16 விக்கெட்கள்