IPL 2023, CSK vs KKR: சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் தொடங்கிய இந்த போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பேட்டிங் தேர்வு செய்தது. இரு அணிகளுக்கும் முக்கியமான போட்டி மற்றும் இந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இறுதியாக விளையாடுகிறது. இதனால் மைதானம் முழுவதும் சென்னை ரசிககர்கள் நிரம்பி வழிந்தனர்.
சென்னை அணியின் இன்னிங்ஸை வழக்கம் போல் ருத்ராஜ் கெய்க்வாட் மற்றும் கான்வே தொடங்கினர். இருவரும் கொல்கத்தா அணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்கினர். சென்னை அணிக்கு சிறப்பான தொடக்கம் அமையவுள்ளது என நினைக்கும் போது கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளாரான வருண் சக்ரவர்த்தி ருத்ராஜின் விக்கெட்டை கைப்பற்றினார். அதன் பின்னர் வந்த ரஹானே பவர்ப்ளே வரை தாக்குப்பிடிட்த்தார். 7வது ஓவரில் தொடங்கி 11வது ஓவர் வரை சென்னை அணியின் வீரர்கள் மைதானத்துக்கு வருவதும், வெளியேறுவதுமாக இருந்தனர்.
இதனால் சென்னை அணியால் ரன்கள் குவிக்க முடியவில்லை. மேலும் சென்னை அணி வீரர்கள் சரியான பார்ட்னர்ஷிப் அமைக்கவில்லை. இதனால் கொல்கத்தா அணியினர் அடுத்தடுத்து விக்கெட்டுகள்ளை வீழ்த்தினர். அதன் பின்னர் கைகோர்த்த டூபே மற்றும் ஜடேஜா சென்னை அணியை மெல்ல மெல்ல மீட்டனர். 17வது ஓவரில் 100 ரன்களை எட்டிய சென்னை அணி அந்த ஓவரில் மட்டும் இரண்டு சிக்ஸர்கள் விளாசி அசத்தினர். இதனால் சென்னை அணியின் ரன்ரேட் சீராக உயரத் தொடங்கியது. இருவர்கள் இருவரும் இணைந்து 40 பந்துகளை எதிர்கொண்டு 51 ரன்கள் சேர்த்து தொடர்ந்து விளையாடினர். ஆனால் மீண்டும் இறுதி ஓவர்களில் கொல்கத்தா அணி சிறப்பாக பந்து வீசியதால் சென்னை அணியால் ரசிகர்கள் எதிர்பர்த்த ரன்களை எட்டமுடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட்டுகளை இழந்து 144 ரன்கள் மட்டுமே எடுத்தது. சென்னை அணி சார்பில் டூபே மட்டும் அதிகபட்சமாக 48 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணியின் சார்பில் வருண் சக்ரவர்த்தி இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்.