இந்தியன் பிரீமியர் லீக்கின் (ஐபிஎல்) 16வது சீசன் இதற்கு முன்னர் நடைபெற்ற 15-வது சீசனைப்போல் இல்லாமல் வழக்கமான ஹோம்-அவே வடிவததில் நடைபெறவுள்ளது.  மேலும் வரும் மார்ச் 31 அன்று நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ்  மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியுடன் தொடங்கவுள்ளது. 


 இந்த சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், பஞ்சாப் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகியவற்றுக்கு எதிராக சேப்பாக்கத்தில் உள்ள சிதம்பரம் மைதானத்தில் விளையாடுகிறது.


சிஎஸ்கே ஹோம் மேட்ச்கள் 2023


ஏப்ரல் 3 - எதிராக லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், இரவு 07:30 மணி 


ஏப்ரல் 12 - எதிராக ராஜஸ்தான் ராயல்ஸ், இரவு 07:30 மணி 


ஏப்ரல் 21 - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் எதிராக, இரவு 07:30 மணி 


ஏப்ரல் 30 - பஞ்சாப் கிங்ஸ் எதிராக, மதியம் 03:30 மணி 


மே 6 - மும்பை இந்தியன்ஸ் எதிராக, பிற்பகல் 03:30 மணி 


மே 10 - எதிராக டெல்லி கேபிடல்ஸ், இரவு 07:30 மணி 


மே 14 - எதிராக கொல்கத்தா நைட் ரைடர்ஸ், இரவு 07:30 மணி 


சிஎஸ்கே லீக்கில்  குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுடன் தலா  ஒருமுறை மட்டுமே மோதவுள்ளது. 


மீதமுள்ள ஐந்து அணிகளுடன் தலா இரண்டு முறை மோதி இந்த சீசனில் மொத்தம் 14 போட்டிகளில் விளையாடவுள்ளது.


அதேபோல், 2023ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் போட்டியில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் ஏப்ரல் மாதம் 3ம் தேதி நடைபெறவுள்ள போட்டிக்கான டிக்கெட் விற்பனை வரும் திங்கட்கிழமை அதாவது எதிர்வரும் 27-ஆம் தேதி விற்பனை தொடங்கவுள்ளது. ஏப்ரல் 3ம் தேதி மிக நீண்ட நாட்களுக்குப் பிறகு சென்னையில் தல தோனி களமிறங்குகிறார் என்பதால் டிக்கெட் விற்பனை அமோகமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


கட்டண விபரம்


கேலரி C/D/E Lower - நேரடி விற்பனை - ரூபாய் 1,500.


கேலரி  D/E Upper  - ஆன்லைன் விற்பனை -  ரூபாய் 3,000.


கேலரி  I/J/K Lower - நேரடி மற்றும் ஆன்லைன் விற்பனை - ரூபாய் 2,500. 


கேலரி  I/J/K Upper  - நேரடி மற்றும் ஆன்லைன் விற்பனை - ரூபாய் 2,000. 


CSK அணி வீரர்கள்


எம்எஸ் தோனி (கேப்டன்), டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்ஷு சேனாபதி, மொயின் அலி, சிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, முகேஷ் சௌத்ரி சிங், தீபக் சௌத்ரினா, மதீஷா சௌத்ரி சிங் , பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா, அஜிங்க்யா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து, கைல் ஜேமிசன், அஜய் மண்டல், பகத் வர்மா.