இந்தியா மட்டுமல்ல உலக கிரிக்கெட் அரங்கம்  முழுவதுமாக காத்துக்கொண்டு இருப்பது 2023-ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகாளுக்காகத்தான். 


கடந்த ஆண்டில்  இருந்து மொத்தம் 10 அணிகள் களமிறங்குவதால், அதிலும் குறிப்பாக கடந்த முறை புதிதாக அறிமுகமாகி தனது அறிமுக சீசனிலேயே கோப்பையைக் கைப்பற்றி அசத்திய குஜராத் அணியின் மீது அனைவரின் கவனம் குவிந்துள்ளது. 


ஹர்திக் பாண்டியாவின் தலைமையிலான அணியில் உள்ள இளம் வீரர்கள் மிகவும் அனுபவம் வாய்ந்த வீரர்களைக் கொண்ட அணியை மிகச் சாதுர்யமாக எதிர்கொண்டு வெற்றி பெற்றது. குஜராத் டைட்டன்ஸ் அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் இம்முறையும் கோப்பையை கைப்பற்ற தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 


இந்நிலையில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர்களில் ஒருவரான ஷிவம் மாவி செய்தியாளர்களிடம் கூறியுள்ள விஷயம் அனைத்து அணிகளின் கவனிப்பை பெற்றுள்ளது. 


அவர் கூறியுள்ளது என்னவென்றால்,  ”நான் நான் இம்முறை ஒரு ஸ்பெஷல் டெலிவரியைத் திட்டமிட்டுள்ளேன், அது என்ன என்பதை இங்கே குறிப்பிடவில்லை, ஆனால் என்னால் அதைச்செயல்படுத்த முடியும் என்று நம்புகிறேன், பின்னர் அதைப்பற்றி பேசுவேன். அது பேட்ஸ்மேன்களுக்கு ரன் எடுப்பதில் சிரமத்தினை ஏற்படுத்தும். மேலும், அந்த பந்து வீச்சின் மீது எனக்கு பெரும் நம்பிக்கை உள்ளது.  99 சதவீதம் நான் அந்த பந்து வீச்சினை சிறப்பாக வீச முடியும் என நம்புகிறேன். அதேபோல், கடந்த இரண்டு ஆண்டுகளாக நான் பேட்டிங்கிலும் கவனம் செலுத்தி வருகிறேன். ஒரு அணியாக நாங்கள் அனைத்திலும் வலிமையாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம். மேலும், நான் இந்தியாவில் நடந்த உள்ளூர் போட்டிகளில் நான் விளையாடியது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. இதனாலே மனதளவில் நான் மிகவும் உறுதியாக இருக்கிறேன்” எனவும் ஷிவம் மாவி கூறியுள்ளார். 


ஐபிஎல் 2023இல் குஜராத் டைட்டன்ஸ் அணியின் போட்டி விபரங்கள்


31-மார்ச்-23 - மாலை 7.30 - குஜராத் டைட்டன்ஸ் v சென்னை சூப்பர் கிங்ஸ் - அகமதாபாத்
04-ஏப்ரல்-23 - மாலை 7.30 - டெல்லி கேபிடல்ஸ் v குஜராத் டைட்டன்ஸ் - டெல்லி
09-ஏப்ரல்-23 - மதியம் 3.30 - குஜராத் டைட்டன்ஸ் v கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - அகமதாபாத்
13-ஏப். -23 – மாலை 7.30 – பஞ்சாப் கிங்ஸ் v குஜராத் டைட்டன்ஸ் – மொஹாலி
16-ஏப்ரல்-23 – மாலை 7.30 – குஜராத் டைட்டன்ஸ் v ராஜஸ்தான் ராயல்ஸ் – அகமதாபாத்
22-ஏப்ரல்-23 – மதியம் 3.30 – லக்னோ சூப்பர் v ஜெயண்ட்ஸ் குஜராத் டைட்டன்ஸ் – லக்னோ
25-ஏப்ரல்-23 – மாலை 7.30 - குஜராத் டைட்டன்ஸ் v மும்பை இந்தியன்ஸ் – அகமதாபாத்
29-ஏப்ரல்-23 – மதியம் 3.30 – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் v குஜராத் டைட்டன்ஸ் – கொல்கத்தா
02-மே-23 – மாலை 7.30 – குஜராத் டைட்டன்ஸ் v டெல்லி கேபிடல்ஸ் – அகமதாபாத்
05-மே-23 – மாலை 7.30 – ராஜஸ்தான் ராயல்ஸ் v குஜராத் டைட்டன்ஸ் - ஜெய்ப்பூர்
07-மே-23 - மதியம் 3.30 - குஜராத் டைட்டன்ஸ் v லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - அகமதாபாத்
12-மே-23 - மாலை 7.30 - மும்பை இந்தியன்ஸ் v குஜராத் டைட்டன்ஸ் - மும்பை
15-மே-23 - மாலை 7.30 - குஜராத் டைட்டன்ஸ் v சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - அகமதாபாத்
21-மே- 23 - மாலை 7.30 - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - குஜராத் டைட்டன்ஸ் - பெங்களூரு