விரைவில் தொடங்க இருக்கும் இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 சீசனில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட இங்கிலாந்து டெஸ்ட் அணி கேப்டன் பென் ஸ்டோக்ஸ் இன்று சென்னை வந்தார்.
இதையடுத்து சிஎஸ்கே தனது ட்விட்டர் பக்கத்தில். ஸ்டோக்ஸ் காரில் வந்து ஹோட்டலுக்குள் நுழையும் வீடியோவை வெளியிட்டு “ நமது ஏரியாவில் உங்கள் நண்பர் பென் ஸ்டோக்ஸ்” என பதிவிட்டிருந்தது.
கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற மினி ஏலத்தில் இங்கிலாந்தின் நட்சத்திர ஆல்-ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் 16.25 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார். ஸ்டோக்ஸ் ஐபிஎல் விளையாட முழுவதுமாக தயாராகி வருகிறார்.
மார்ச் 31 ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மோடி ஸ்டேடியத்தில் நடப்பு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே களமிறங்குகிறது. இந்த போட்டியில் ஸ்டோக்ஸ் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 2021 ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய பென் ஸ்டோக்ஸ், கடந்த 2022 ஐபிஎல் மெகா ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்யவில்லை.
பென் ஸ்டோக்ஸ் இதுவரை 43 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி இரண்டு சதங்கள் மற்றும் இரண்டு அரைசதங்கள் உள்பட 920 ரன்கள் எடுத்துள்ளார். அதேபோல், 28 விக்கெட்களையும் வீழ்த்தி அசத்தியுள்ளார்.
அடுத்த கேப்டன் பென் ஸ்டோக்ஸா..?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அடுத்த கேப்டன் யார் என்ற கேள்விக்கு கேப்டன் எம்.எஸ். தோனி போகும்போதும் சிறந்த தலைமையை சிஎஸ்கே அணிக்கு கொடுத்துவிட்டு செல்வார் என்ற அடிப்படையில் கடந்த ஆண்டு ரவீந்திட ஜடேஜா கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஆனால், நியமிக்கப்பட்ட சில போட்டிகள் தொடர் தோல்வியை சந்தித்தது. இதையடுத்து மீண்டும் தோனிக்கு சிஎஸ்கே கேப்டன் பதவி வழங்கப்பட்டது.
கடந்த 2022 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று ஏமாற்றத்தை அளித்தது. இதற்குப் பிறகு, இந்த ஆண்டு ஏலத்தில், சென்னை அணி பென் ஸ்டோக்ஸ் என்ற சிறந்த ஆல்-ரவுண்டரை ஏலம் எடுத்தது. அவர் அடுத்த ஆண்டு அணியின் கேப்டனாகவும் செயல்பட வாய்ப்புள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி: மகேந்திர சிங் தோனி (கேப்டன்), ரவீந்திர ஜடேஜா, டெவோன் கான்வே, ரிருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்ஷு சேனாபதி, மொயீன் அலி, ஷிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், தீபக் சாஹர், தீபக் சாஹர், சி. , மதிஷா பத்திரனா, சிமர்ஜித் சிங், பிரசாந்த் சோலங்கி, மகிஷ் திக்ஷ்னா, அஜிங்க்யா ரஹானே, பென் ஸ்டோக்ஸ், ஷேக் ரஷித், நிஷாந்த் சிந்து, அஜய் மண்டல், பகத் வர்மா.
குறிப்பு: ஜேமிசன் காயம் காரணமாக வெளியேறினார்.