இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2023 தொடங்குவதற்கு முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு பெரும் அடி ஏற்பட்டுள்ளது.  ஏனெனில் அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்  காயம் காரணமாக முழு போட்டியிலிருந்தும் விலகியுள்ளதாக கொல்கத்தா அணி வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக கிரிக்கெட் வட்டாரத்தில் செய்திகள் கசிந்த வண்ணம் உள்ளன. 


காயத்தில் ஸ்ரேயாஸ்:


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது ஸ்ரேயாஸ் முதுகில் காயம் அடைந்தார், மேலும் அவருக்கு முதுகில் அறுவை சிகிச்சை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது, அது அவரை 2 முதல் 3 மாதங்கள் கிரிக்கெட் விளையாடமல் செய்யும் என கூறப்படுகிறது.  2022ல் ரூ. 12.25 கோடிக்கு வாங்கப்பட்ட ஸ்ரேயஸ் ஐயர் இல்லாதது கொல்கத்தா அணிக்கு மிகப்பெரிய இழப்பாக இருக்கும், ஏனெனில் கொல்கத்தா அணியைப் பொறுத்தவரை ஸ்ரேயஸ் ஐயர் ஒரு முக்கிய பேட்டர்.  ஸ்ரேயாஸ் இல்லாத நிலையில், கேகேஆர் கேப்டனாக அவருக்கு பதிலாக அணியில் உள்ள வீரர்களில் மூன்று பேர்களில் ஒருவர் அணியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. 



சுனில் நரேன்


மேற்கிந்தியத் தீவுகளின் மூத்த சுழற்பந்து வீச்சாளர் 2012 இல் கொல்கத்தா நைட் ரைடர்ஸில் இணைந்தார், அதன் பின்னர், அவர் ஐபிஎல் போட்டியில் மட்டும் அதிக எண்ணிக்கையிலான போட்டிகளில் விளையாடியுள்ளார். சுழற்பந்து வீச்சாளரான இவர் கொல்கத்தாவின் மற்ற அணிகளை வழிநடத்தியுள்ளார்.  அபுதாபி அணியான  ILT20 இல் அபுதாபி நைட் ரைடர்ஸ் மற்றும் கரீபியன் பிரீமியர் லீக்கில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் ஆகியோரையும் வழிநடத்தியுள்ளார். இரண்டு முறை பட்டத்தை வென்ற கொல்கத்தா அணியின் ஒரு பகுதியாக நரைன் இருந்துள்ளார், மேலும் ஷ்ரேயாஸ் இல்லாத நிலையில் அவர் அணியை வழிநடத்த சரியான தேர்வாக இருக்க முடியும் என கிரிக்கெட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. 


ஷர்துல் தாக்கூர்


KKR உடன் ஷர்துல் தாக்கூருக்கு இது முதல் சீசன் ஆனால் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் உடனான அவரது பழைய அறிமுகம் அவரை கேப்டனாக நியமிக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளது. ஷர்துல் இந்தியாவிற்கான சிறந்த ஆல்-ரவுண்ட் தேர்வாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டு வருகிறார்.  மேலும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்காக விளையாடியது அவருக்கு நல்ல சீரியஸாக இல்லாவிட்டாலும், பாட் கம்மின்ஸ் இல்லாத நிலையில் ஆண்ட்ரே ரஸ்ஸுலுக்கு துணையாக கொல்கத்தா அணியில் ஷர்துல் தாக்கூர் இருப்பார் என கூறப்படுகிறது. 


ஷகிப் அல்ஹசன் 


பங்களாதேஷ் அணியின்  ஆல்-ரவுண்டர் மீண்டும் கொலக்த்தா அணியில் இணைந்துள்ளார்.   மேலும் அவர் 2023ஆம் ஆண்டு  சீசனில் அவர்களை வழிநடத்த அவருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என கூறப்படுகிறது. அவர் பல ஆண்டுகளாக பங்களாதேஷை வழிநடத்தியுள்ளார் மற்றும் அணி கொல்கத்தா அணியுடனான நிர்வாகத்துடனான அவரது அனுபவம் காரணமாக அவருக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது.