ஐபிஎல் 2023 ஏலம் வருகிற 23ம் தேதி கொச்சியில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் போட்டித் தொடர்களில் ஒன்றாக ஐ.பி.எல். திகழ்கிறது. டி20 போட்டித் திருவிழாவான இந்த ஐ.பி.எல். போட்டித் தொடரில் நடப்பாண்டில் 10 அணிகள் களமிறங்கின. அறிமுக அணியாக களமிறங்கிய குஜராத் டைட்டன்ஸ் கோப்பையை வென்று அசத்தியது. 


இந்தநிலையில், அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் 2023 ஏலம் வருகிற 23ம் தேதி கொச்சியில் நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக, 2023ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டிகளுக்கான ஏலம் வரும் டிசம்பர் மாதம் 16-ந் தேதி நடைபெற உள்ளது. குட்டி ஏலமாக நடைபெறும் இந்த ஏலத்தில் எந்தெந்த அணியினர் தாங்கள் தக்க வைக்க விரும்பும் வீரர்களை தக்க வைக்கிறார்களோ, அவர்கள் தவிர அந்த அணியினரால் விடுவிக்கப்பட்ட வீரர்களை வைத்து ஏலம் நடத்தப்படும்.






ஐ.பி.எல். தொடரில் பங்கேற்றுள்ள 10 அணிகளும் தாங்கள் தக்க வைக்கும் வீரர்கள் யார்? யார்? எனும் பட்டியலை வரும் 16-ந் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும் என ஏற்கனவே பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது. இதனால், ஐ.பி.எல். தொடரில் பங்கேற்றுள்ள அணிகள் தாங்கள் தக்க வைக்க விரும்பும் வீரர்களின் பட்டியல் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.  


கடந்த ஆண்டு ஏலத்திற்குப் பிறகு, பஞ்சாப் கிங்ஸ் 3.45 கோடியை மீதமாக வைத்துள்ளது. அதே நேரத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அனைத்தையும் செலவிட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 2.95 கோடியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 1.55 கோடியும், ராஜஸ்தான் ராயல்ஸ் 0.95 கோடியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 0.45 கோடியும் மீதம் வைத்துள்ளது.


கடந்த ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் 0.15 கோடி ரூபாயும், மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய மூன்று அணிகள் 0.10 கோடியையும் மீத பணமாக வைத்துள்ளனர். 


கடந்த ஏலத்தில் அதிக விலைக்கு எடுக்கப்பட வீர்ர்கள்:


ஏலத்தில் அதிகபட்சமாக இஷான் கிஷன் 15.25 கோடி ரூபாய்க்கும், தீபக் சாஹர் 14 கோடி ரூபாய்க்கும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர். 


தவான்-  8.25 crore - பஞ்சாப் கிங்ஸ்
அஷ்வின்- 5 crore - ராஜஸ்தான் ராயல்ஸ்
கம்மின்ஸ்- 7.25 crore - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ரபாடா - 9.25 crore - பஞ்சாப் கிங்ஸ்
போல்ட் - 8 crore - ராஜஸ்தான் ராயல்ஸ்
ஸ்ரேயாஸ் ஐயர்- 12.25 crore - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
ஷமி- 6.25 crore - குஜராத் டைட்டன்ஸ்
டு ப்ளெசி - 7 crore - ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு
டி காக் - 6.75 crore - லக்னோ சூப்பர் ஜியன்ட்ஸ்
வார்னர் - 6.25 - டெல்லி கேப்பிடல்ஸ்